உடற் பருமன்
வார்ப்புரு:Infobox medical condition (new) கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஓர் இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு நோயாகவும் அடையாளப்படுத்தப்பட்டது.[1]. ஆனாலும் இதனை ஒரு நோய் என்று அடையாளப்படுத்துதல் சரியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.[2][3]
மேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு சீரிய பொது சுகாதார/உடல்நல பிரச்சினையாக கருதப்படுகின்றது. மேலும், சில சமூகங்களில் உடல் பருமன் பண வசதியை சுட்டி நின்றாலும், அனேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாகவும் ஒழுக்கமற்றதாகவும் கருதப்படுகின்றது.
2016 இல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 1980 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த உடல் பருமனுள்ளோரின் எண்ணிக்கை இரட்டிப்பு அடைந்துள்ளது எனவும், உடல்நிறை குறைவினால் ஏற்படும் இறப்பை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்பு அதிகமாக உள்ள நாடுகளிலேயே, உலகின் சனத்தொகையின் கூடிய பங்கு வசிக்கிறது எனவும், உடற் பருமன் ஒரு தடுக்கப்படக்கூடிய நிலைமையே என்கிறது.[4]
உடல் பருமன் சுட்டு
ஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு (en:BMI என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் (இரட்டிப்பு எண்ணால்) பிரிப்பதால் பெறப்படுகின்றது ().)[5] பின்னர் ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையைப்[6] பயன்படுத்தி உடல் பருமன் அதிகமா இல்லையா என்று கணிக்கப்படுகின்றது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடே. இது ஒருவரின் உடல் தன்மையை கணக்கில் எடுப்பது இல்லை. எ.கா ஒருவர் உடற்பயிற்சி செய்து நல்ல கட்டுகோப்பான ஆனால் நிறை கூடிய உடலை வைத்திருப்பாரானால் அவரை உடல் பருமன் உடையவர் என்று இச்சுட்டு காட்டக் கூடும்.
உடல் பருமனுக்கான காரணங்கள்
- அதிகமாக உணவு உண்ணல்
- உடல் உழைப்பு இன்மை
- அமர்ந்தியங்கும் வாழ்முறை
உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை
தற்போதைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது குறைந்து வருகிறது. உடற்பருமனில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுமைக்கும் தற்போது தொழினுட்பம் அதிகம் பயன்படுத்தி, குறைவான உடல் உழைப்பையே செய்கின்றனர். மேலும் தற்போது 30 சதவீத மக்கள் குறைவான உடற்பயிற்சியை செய்கின்றனர். சிறுகுழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரும் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர்.[7][8][9] இதன் காரணமாகவும் உடற்பருமன் ஏற்படுகிறது. 73 பேரில் 63 பேருக்கு குழந்தைப் பருவத்திலேயே உடற்பருமன் வந்ததாகவும் அதற்கு அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்ததே காரணமாகவும் இருந்தது.[10]
உடலில் ஏற்படும் மாற்றங்கள்
அதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக
- உயர் ரத்த அழுத்த நோய்
- இரண்டாம் வகை சர்க்கரை நோய்
- மூச்சுத்திணறல்
- மூட்டு வலி
- முதுகு வலி
- மாரடைப்பு
- மார்பகப் புற்றுநோய்
- பித்தப்பை கற்கள்
- குடலிறக்கம்
- உறக்கச் சுவாசத்தடை
- மலட்டுத்தன்மை
இறப்பியல்பு
உலக அளவில் தடுக்கக்கூடிய நோயினால் இறப்பதில் உடற்பருமன் முதன்மையாக உள்ளது. உடற்பருமன் சுட்டானது யாருக்கு அதிகம் (20-25) உள்ளதோ அவருக்கு இறப்பு விகிதம் அதிகம் உள்ளது.
பாதிப்புகள்
எவர் ஒருவர் உணவு எடுத்துக்கொள்ளும் விகிதமானது அதிகமாகவும், உடலுழைப்பு குறைவாகவும் உள்ள மனிதர்களுக்குத் தான் உடற் பருமன் அதிகம் ஏற்படுவதாக கருதப்படுகிறது. மிகச் சிலருக்குத்தான் அது மரபுவழியாகவும், சில மருத்துவ காரணங்களினாலும், சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுகின்றன. 2006 ஆம் ஆண்டின் ஆய்வின்படி மற்ற 10 காரணங்கள் உடற்பருமனுக்காக கூறப்படுகிறது.
- போதிய தூக்கமின்மை
- நாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள்
- கால நிலைகளின் மாற்றம்
- அதிக புகைப்பழக்கம்
- அதிக மருந்துகளை உட்கொள்ளல்
- தாமதமான குழந்தைப்பேறு
- மரபுவழிப் பிரச்சினை
- அதிக உடல் சுட்டு
- தொகு புணர்ச்சி
நோயுற்ற விகிதம்
உடற்பருமன் என்பது உடல் அளவிலும், மனதளவிலும் மனிதர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.மேலும் இவற்றால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவைகளு,ம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
| மருத்துவத் துறை | நிலை | மருத்துவத் துறை | நிலை |
|---|---|---|---|
| இதய இயல் | தோல்நோய் | ||
| நாளமில்லாச் சுரப்பிகள் |
|
இரைப்பை குடல் அழற்சி |
|
| நரம்பியல் | புற்றுநோயியல் [21] |
| |
| மனநலவியல் |
|
சுவாசவியல் |
|
| வாதம் மற்றும் எலும்பியல் | சிறுநீரகவியல் மற்றும் நரம்பியல் |
சான்றுகள்
வெளி இணைப்புகள்
- உடல் பருமன் பிரச்சனை வார்ப்புரு:Webarchive
- உடல் பருமன்
- World Health Organization – Obesity pages
- Diet, Nutrition and the prevention of chronic diseases (including obesity) by a Joint WHO/FAO Expert consultation (2003). Summary by GreenFacts.
- Obesity at Endotext.org வார்ப்புரு:Webarchive
- International Task Force on Obesity
- Rudd Center for Food Policy and Obesity at Yale University
- Australasian Society for the Study of Obesity வார்ப்புரு:Webarchive
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ 13.0 13.1 13.2 13.3 13.4 வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal