உட்சில்லுரு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
சிறிய வட்டம் (கருப்பு) பெரிய வட்டத்தின் (நீலம்) உட்புறம் தொட்டவாற்று உருளும் போது வரையப்படும் உட்சில்லுரு (சிவப்பு) (இப்படத்தில் R = 5, r = 3, d = 5).

உட்சில்லுரு (hypotrochoid) என்பது ஒரு வட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புள்ளியொன்றின் தடத்தினைக் காட்டும் சிறுசில்லி (roulette) வகையைச் சேர்ந்த ஒரு வளைவரை. தொடர்புபடுத்தப்பட்ட வட்டத்தின் மையத்துக்கும் அப்புள்ளிக்கும் இடையே உள்ள தூரம் d அலகுகள். இந்த வட்டத்தின் ஆரம் r அலகுகள். இவ்வட்டம் R அலகு ஆரமுள்ள மற்றொரு நிலையான வட்டத்தின் உட்புறத்தைத் தொட்டபடியே நழுவாமல் உருளும் போது, நாம் எடுத்துக்கொண்ட புள்ளி நகர்கின்ற தடம் ஒரு வளைவரையாக இருக்கும். சிறுசில்லி வகையைச் சேர்ந்த இவ்வளைவரை, உட்சில்லுரு என அழைக்கப்படுகிறது.

d இன் அளவு r இன் மதிப்பை விடச் சிறியதாகவோ, பெரியதாகவோ அல்லது சமமாகவோஇருக்கலாம். அதாவது புள்ளி வட்டத்துக்குள்ளே, வட்டத்திற்கு வெளியே அல்லது வட்டத்தின் மீது இருக்கலாம். வட்டத்தின் மீது புள்ளி அமையும் போது உட்சில்லுரு, உள்வட்டப்புள்ளியுருவாக அமையும்.

எடுத்துக்காட்டு

  • சுழல் வரைவி -விளையாட்டுக் கருவியால் வரையப்படுபவை, உட்சில்லுரு மற்றும் வெளிச்சில்லுரு வளைவரைகள்.

உட்சில்லுருவின் துணையலகுச் சமன்பாடுகள்

x(θ)=(Rr)cosθ+dcos(Rrrθ)
y(θ)=(Rr)sinθdsin(Rrrθ).

இங்கு θ, உருளும் வட்டத்தின் மையம் கிடைமட்டத்தோடு உண்டாக்கும் கோணம். (θ, போலார் கோணம் அல்ல.)

சிறப்பு வகைகள்

நீள்வட்டத்தை (சிவப்பு) உட்சில்லுருவின் சிறப்பு வகையாகக் (R = 2r) கொள்ளலாம்; இப்படத்தில் R = 10, r = 5, d = 1.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

de:Zykloide#Epi- und Hypozykloide ja:トロコイド#内トロコイド

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=உட்சில்லுரு&oldid=736" இலிருந்து மீள்விக்கப்பட்டது