உட்தொடு முக்கோணம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
ΔABC-ன் உள்வட்டம் (நீலம்), உள்மையம் (நீலம்-I ), கெர்கோனின் தொடுமுக்கோணம் (சிவப்பு- ΔTaTbTc) மற்றும் கெர்கோன் புள்ளி (பச்சை-Ge)

ஒரு முக்கோணத்தின் உட்தொடு முக்கோணம் அல்லது தொடு முக்கோணம் (Intouch triangle or contact triangle) என்பது ஒரு முக்கோணத்தின் உள்வட்டமானது அம்முக்கோணத்தின் பக்கங்களைத் தொடும் மூன்று புள்ளிகளையும் உச்சிகளாகக் கொண்ட முக்கோணம் ஆகும். உட்தொடு முக்கோணமானது கெர்கோன் முக்கோணம் ( Gergonne triangle) எனவும் அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ABC -ன் உள்வட்டமானது முக்கோணத்தின் பக்கங்களைத் தொடும்புள்ளிகள்:

TA , உச்சி A -க்கு எதிர்ப்பக்கத்தின் தொடு புள்ளி;
TB , உச்சி B -க்கு எதிர்ப்பக்கத்தின் தொடு புள்ளி
TC , உச்சி C -க்கு எதிர்ப்பக்கத்தின் தொடு புள்ளி

இம் மூன்று தொடுபுள்ளிகளையும் உச்சிகளாகக் கொண்ட முக்கோணம் TATBTC உட்தொடு முக்கோணமாகும். ABC-ன் உள்வட்டமானது TATBTC -க்கு சுற்றுவட்டமாக இருக்கும்.

ABC -ன் பக்கங்கள்  BC,  CA,  AB, -க்கு வரையப்பட்ட வெளிவட்டங்களின் தொடு புள்ளிகளை உச்சிகளாகக் கொண்ட முக்கோணம், வெளித்தொடு முக்கோணம் ஆகும். ABC -ன் உட்கோண இருசமவெட்டிகளானது முக்கோணத்தின் பக்கங்களை வெட்டும் புள்ளிகளால் உருவாகும் முக்கோணம், உள்மைய முக்கோணம் (incentral triangle) எனப்படும்.

உட்தொடு முக்கோணத்தின் உச்சிகள்

உட்தொடு முக்கோணத்தின் உச்சிகளின் முக்கோட்டு ஆட்கூறுகள் (Trilinear coordinates)

Avertex=0:sec2(B2):sec2(C2)
Bvertex=sec2(A2):0:sec2(C2)
Cvertex=sec2(A2):sec2(B2):0

பக்க நீளங்கள்

மூல முக்கோணம் ABC இன் பக்கநீளங்கள் a, b, c மற்றும் கோணங்கள் A, B, C எனில் உட்தொடு முக்கோணத்தின் பக்கநீளங்கள்:

a,=(a+b+c)cos(1/2A)
b,=(ab+c)cos(1/2B)
c,=(a+bc)cos(1/2C).

பரப்பளவு

உட்தொடு முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடுகள்: Δ,=(a+bc)(ab+c)(a+b+c)(4abc)Δ

=2r2sabcΔ
=Δ22Rs

Δ, r, s, R முறையேமூல முக்கோணம் ABCஇன் பரப்பளவு, உள்வட்ட ஆரம், அரைச்சுற்றளவு, சுற்றுவட்ட ஆரம் ஆகும். வெளித்தொடு முக்கோணம், உட்தொடு முக்கோணம் இரண்டின் பரப்பளவும் சமமானவை.

கெர்கோன் புள்ளி

ATA, BTB மற்றும் CTC கோடுகள் மூன்றும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அப்புள்ளியானது, ABC-இன் கெர்கோன் புள்ளி GeX(7) எனப்படும்.[1] ABC-இன் கெர்கோன் புள்ளியானது நாகெல் புள்ளியின் ஐசோட்டாமிக் இணையியமாகவும் உட்தொடு முக்கோணத்தின் சமச்சரிவு இடைக்கோட்டுப் புள்ளியாகவும் இருக்கும். மேலும் கெர்கோன் புள்ளி ஒரு முக்கோண மையமாகும்.

கெர்கோன் புள்ளியின் ஆட்கூறுகள்

கெர்கோன் புள்ளியின் முக்கோட்டு ஆட்கூறுகள்:

sec2(A2):sec2(B2):sec2(C2),
(அல்லது சைன் விதியைப் பயன்படுத்தி)
bcb+ca:cac+ab:aba+bc.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=உட்தொடு_முக்கோணம்&oldid=1046" இலிருந்து மீள்விக்கப்பட்டது