உணர்திற வெப்பம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வெப்பவேதியியலில் உணர்திற வெப்பம் (Sensible heat) என்பது ஓர் அமைப்பு தன்னுடைய வெப்பநிலையும் வேறு சில வெப்ப இயக்கவியல் பண்புகளும் மாறும்படியாகப் பரிமாறிக் கொள்ளும் வெப்பம் ஆகும். இந்த வெப்ப மாற்றத்தின் போது, அழுத்தம், கனவளவு போன்ற பிற பண்புகள் மாறாதிருக்கலாம்.[1][2][3][4]

இதற்கு மாறாக, பரிமாற்றமடையும் வெப்பம் மறைந்து இருக்குமானால் அது மறை வெப்பம் என்று வழங்கப்படும். காட்டாக, ஒரு பனிக்கட்டி வெப்பத்தை உறிஞ்சி உருகும்போது, அவ்வாறு உள்ளிழுக்கப்படும் வெப்பமானது, வெப்பநிலையை மாற்றாமல் நீராக மாற்றுவதால் அது மறைந்திருக்கும் வெப்பம் என்னும் பொருள்படும்படி மறை வெப்பம் எனப்படுகிறது.

உணர்திற வெப்பமும், மறை வெப்பமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. ஆனால், இவை ஆற்றலின் சிறப்பு வகைகள் அல்லன. வெப்பப் பரிமாற்றம் ஏற்படும்போது, தொடர்புடைய அமைப்பின் மீது உருவாக்கும் தாக்கத்தைக் கொண்டு இவ்விரண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.

ஒரு வெப்ப இயக்கவியல் அமைப்பின் உணர்திற வெப்பத்தைக் கணிக்க, அதன் நிறையையும் (m), வெப்பக் கொண்மையையும் (c), வெப்பநிலை மாற்றத்தையும் (ΔT) பெருக்க வேண்டும். (Q) என்பது வெப்பமானால்,

Qsensible=mcΔT.
வெப்பமானியால் அளக்க இயலும் ஆற்றலே உணர்திற வெப்பம் என்று குறிப்பிடுகிறார் அறிவியலாளர் ஜூல்

1847ல், பிரித்தானிய அறிவியலாளர் ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் உணர்திற வெப்பத்தை ஒரு வெப்பமானி கொண்டு அளக்க இயலும் ஆற்றல் என்று குறிப்பிட்டுள்ளார்.[5]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Partington, J.R. (1949). An Advanced Treatise on Physical Chemistry, Volume 1, Fundamental Principles. The Properties of Gases, Longmans, Green, and Co., London, pages 155-157.
  2. Prigogine, I., Defay, R. (1950/1954). Chemical Thermodynamics, Longmans, Green & Co, London, pages 22-23.
  3. Adkins, C.J. (1975). Equilibrium Thermodynamics, second edition, McGraw-Hill, London, வார்ப்புரு:ISBN, Section 3.6, pages 43-46.
  4. Landsberg, P.T. (1978). Thermodynamics and Statistical Mechanics, Oxford University Press, Oxford, வார்ப்புரு:ISBN, page 11.
  5. வார்ப்புரு:Cite, Lecture on Matter, Living Force, and Heat. May 5 and 12, 1847
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=உணர்திற_வெப்பம்&oldid=1260" இலிருந்து மீள்விக்கப்பட்டது