உருபீடியம் சல்பைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox ருபீடியம் சல்பைடு (Rubidium sulfide) Rb2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு மற்ற கார உலோக சல்பைடுகளின் பண்புகள் அனைத்தையும் பெற்றுள்ளது.

தயாரிப்பு

ருபீடியம் ஐதராக்சைடு கரைசலில் ஐதரசன் சல்பைடை கரைத்து வினைபுரியச் செயதால் முதலில் ருபீடியம் பைசல்பைடும் தொடார்ந்து ருபீடியம் சல்பைடும் உருவாகின்றன.[1][2]

RbOH + H2S --> RBHS +H2O
RbHS + RbOH --> Rb2S + H2O

இயற்பியல் பண்புகள்

இலித்தியம் சல்பைடு, சோடியம் சல்பைடு, பொட்டாசியம் சல்பைடு போன்ற சல்பைடுகள் போல எதிர்-புளூரைட்டு கட்டமைப்பில் ருபீடியம் சல்பைடும் கனசதுர படிகமாக உள்ளது. Fm3¯m என்ற இடக்குழு அடையாளமும் a = 765.0 பைக்கோ மீட்டர் என்ற படிக அணிக்கோவை அலகையும் பெற்றுள்ளது.[3]

வேதியியல் பண்புகள்

ருபீடியம் சல்பைடு ஐதரசன் வாயுவின் முன்னிலையில் கந்தகத்துடன் வினைபுரிந்து ருபீடியம் பெண்டாசல்பைடைக் (Rb2S5) கொடுக்கிறது.[4]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:சல்பைடுகள்

  1. Wilhelm Blitz, Ernst Wilke-Dörfurt: "Über Sulfide des Rubidiums und Cäsiums" in Zeitschr. f. anorg. Chem. 1906. 48, S. 297–317. Volltext
  2. R. Abegg, F. Auerbach: 'Handbuch der anorganischen Chemie'. Verlag S. Hirzel, Bd. 2, 1908. S. 430.Volltext
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Lax என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Wilhelm Blitz, Ernst Wilke-Dörfurt: Ueber die Pentasulfide des Rubidiums und Cäsiums. In Ber. d. dt. chem. Ges. 1905, 38, 1, S. 123–130, வார்ப்புரு:Doi.
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=உருபீடியம்_சல்பைடு&oldid=1477" இலிருந்து மீள்விக்கப்பட்டது