எண்கணித எண்
Jump to navigation
Jump to search

எண் கோட்பாட்டில் ஒரு முழு எண்ணின் நேர் வகுஎண்களின் கூட்டுச் சராசரியும் ஒரு முழு எண்ணாக இருந்தால் அந்த மூல முழுஎண் எண்கணித எண் (arithmetic number) எனப்படும்.
எடுத்துக்காட்டு:
- 6 ஒரு எண்கணித எண்.
- 2 ஒரு எண்கணித எண் அல்ல. ஏனென்றால் அதன் வகுஎண்கள் 1, 2. இவற்றின் சராசரி 3/2 என்பது ஒரு முழுஎண்ணல்ல.
எண்கணித எண்களின் தொடர்வரிசையில் துவக்க எண்கள் சில:
- 1, 3, 5, 6, 7, 11, 13, 14, 15, 17, 19, 20, 21, 22, 23, 27, 29, 30, 31, 33, 35, 37, 38, 39, 41, 42, 43, 44, 45, 46, 47, 49, ... வார்ப்புரு:OEIS
அடர்த்தி
எண்கணித எண்களின் இயல் அடர்த்தி 1 ஆகும்[1][2]
ஒரு எண் N இன் வகுஎண் சார்பு d(N) ஆனது அதன் வகுஎண்களின் கூட்டுச்சார்பை (σ(N)) வகுக்குமானால் N ஒரு எண்கணித எண்ணாக இருக்கும். σ(N) ஐ d(N)2 வகுக்கும் என்ற நிபந்தனையை நிறைவு செய்யும் முழுஎண்களின் அடர்த்தி 1/2.[1][2]
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Guy (2004) p.76
- ↑ 2.0 2.1 வார்ப்புரு:Cite book