எண்டர்சன்-ஏசல்பாக் சமன்பாடு
எண்டர்சன்-ஏசல்பாக் சமன்பாடு (Henderson–Hasselbalch equation) என்பது வேதியியலிலும் மற்றும் உயிர்வேதியியலிலும் தாங்கல் கரைசலின் காரகாடித்தன்மைச் சுட்டெண்ணை மதிப்பிடப் பயன்படும் ஒரு சமன்பாடாகும்.
ஒரு அமிலத்தின் காடித்தன்மை எண் மதிப்பானது, Ka, அறியப்பட்டதாகவோ அல்லது புனையப்பட்டதாகவோ இருக்கலாம். காரகாடித்தன்மை எண்ணானது அமிலம் (HA), அதன் உப்பு (MA) மற்றும் அதன் இணைக்காரம் (A-) ஆகியவற்றின் கொடுக்கப்பட்ட செறிவின் மதிப்புகளுக்கு கணக்கிடப்படுகிறது; உதாரணமாக, கரைசலானது அசிட்டிக் காடி மற்றும் சோடியம் அசிட்டேட்டு ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
வரலாறு
1908 ஆம் ஆண்டில் லாரன்சு சோசப் எண்டர்சன் என்பவர் தாங்கல் கரைசலின் காரகாடித்தன்மைச் சுட்டெண்ணைக் கண்டறிவதற்கான ஒரு சமன்பாட்டை வருவித்தார்.[1] 1917 ஆம் ஆண்டில், கார்ல் ஆல்பர்ட்டு ஏசல்பாக் என்பவர் அந்த வாய்ப்பாட்டை மடக்கை வடிவில் உருவாக்கினார்.[2] இதுவே எண்டர்சன்–ஏசல்பாக் சமன்பாட்டை உருவாக்கியது.