எத்தில் அயோடைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

எத்தில் அயோடைடு (Ethyl iodide) என்பது C2H5I என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நிறமற்ற வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அயோடோ மீத்தேன் என்றும் அழைக்கப்படுகிறது. எத்தனாலுடன் அயோடின் மற்றும் பாசுபரசு[1] சேர்த்து சூடுபடுத்தும் போது எத்தில் அயோடைடு உருவாகிறது. காற்றில் படும்போது குறிப்பாக ஒளியால் பாதிக்கப்பட்டு கரைந்துள்ள அயோடின் காரணமாக மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக மாறுகிறது. ஐதரயோடிக் அமிலம் மற்றும் எத்தனால் வினைபுரியும் போதும் காய்ச்சி வடித்து எத்தில் அயோடைடு தயாரிக்கலாம். செப்புத் துகளில் சேமித்து வைத்தால் மட்டுமே விரைவாகச் சிதைவடைவதில் இருந்து எத்தில் அயோடைடை பாதுகாக்க முடியும். இவ்வாறான முறையும் கூட ஓராண்டு வரைதான் பலன்தரும் என்பது கவனிக்கத் தக்கதாகும்.

எத்தில் அயோடைடு காய்ச்சி வடித்தல். சிதைவடைதலால் இது பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

ஏனெனில் அயோடைடு நல்ல விடுபடும் குழுவாகும், மற்றும் எத்தில் அயோடைடு ஒரு வலிமையான எத்திலேற்றும் முகவராகக் செயல்படக் கூடியச் சேர்மமாகும். ஐதரசனை தனி உறுப்பாக வழங்கும வேதிப் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

சிவப்பு பாசுபரசு, எத்தனால், மற்றும் அயோடின் ஆகியன வினைபுரிவதால் எத்தில் அயோடைடு தயாரிக்கப்படுகிறது. தனிநிலை எத்தனாலும் அயோடின் பொடியும் எத்தனாலில் கரைந்து இச்செயல் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. செயல்முறை நிகழும் போது வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைப்புத்தன்மையற்றது என்ற காரணத்தினால் பாசுபரசு முக்குளோரைடு அவ்விடத்திலேயே தயாரித்துக் கொள்ளப்படுகிறது[2]

3 C2H5OH+PI33 C2H5I+H3PO3

மாசு கலந்து உருவாகும் இக்கலவை காய்ச்சி வடித்தல் முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. Merck Index of Chemicals and Drugs, 9th ed., monograph 3753
  2. Csámpai,A;Láng,E;Majer,Zs;Orosz,Gy;Rábai,J;Ruff,F;Schlosser,G;Szabó,D;Vass,E: Szerves Kémiai Praktikum page: 274, Eötvös kiadó 2012 வார்ப்புரு:ISBN
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=எத்தில்_அயோடைடு&oldid=1128" இலிருந்து மீள்விக்கப்பட்டது