ஐங்கோணப் பட்டகம்
Jump to navigation
Jump to search

வடிவவியலில் ஐங்கோணப் பட்டகம் (pentagonal prism) என்பது ஐங்கோண வடிவ அடிப்பக்கங்கொண்ட பட்டகமாகும். இது, 10 உச்சிகள், 15 விளிம்புகள், 7 முகங்கள் கொண்ட ஒருவகையான எழுமுகத்திண்மம். ஐங்கோணப் பட்டகத்தின் அனைத்து முகங்களும் ஒழுங்கு பல்கோணமாக இருந்தால் அது ஒரு சீர் பன்முகத்திண்மமாக இருக்கும்.
கனவளவு
ஐங்கோணப் பட்டகத்தின் கனவளவு, அதன் அடிப்பக்க ஐங்கோணத்தின் பரப்பளவு, அடிப்பக்கத்துக்குச் செங்குத்தாக பட்டகத்தின் ஏதாவதொரு விளிம்புவழியே அளக்கப்படும் தொலைவு ஆகிய இரண்டின் பெருக்கற்பலனாகும்.
h அளவு விளிம்பு நீளங்கொண்ட சீர் ஐங்கோணப் பட்டகத்தின் கனவளவு:
வெளியிணைப்புகள்
- வார்ப்புரு:Mathworld
- Pentagonal Prism Polyhedron Model -- works in your web browser