ஒப்பு உயிரியல் விளைவு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

ஊடுகதிரியலில் ஒப்பு உயிரியல் விளைவு (relative biological effectiveness; RBE) என்பது ஒரு உயிரியின் அல்லது அதன் ஒரு உறுப்பில் ஒரு குறிப்பிட்ட விளைவினைத் தோற்றுவிக்கத் தேவைப்படும் திட்டமாகக் கொண்ட கதிர்வீச்சின் ஏற்பளவிற்கும் அதே விளைவினைத் தோற்றுவிக்க, சோதனைக்காக எடுத்துக்கொண்ட கதிரின் ஏற்பளவிற்குமுள்ள விகிதமாகும். இச்சொல் கதிர்உயிரியலில் (Radiobiology) மட்டும் பயன் படுத்தப்படுகிறது. பொதுவாக, திட்டக்கதிராக 200 கிலோ எலெக்ட்ரான் வோல்ட் (keV) எக்சு கதிர்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

வரைவிலக்கணம்

T வகைத் திசு ஒன்றில் "R"-வகை கதிர்வீச்சிற்கு ஒப்பு உயிரியல் விளைவு (RBE) பின்வருமாறு தரப்படு:

RBE=DXDR

இங்கு, DX என்பது "X"-வகை கதிர் ஏற்பளவு, DR என்பது அதே அளவு உயிரியல் விளைவைத் தோற்றுவிக்கும் "R" வகை கதிர்வீச்சின் ஏற்பளவு ஆகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட விளைவிற்கு 200 கிலோ எலெக்ட்ரான் வோல்ட் கதிர்களுக்கு 150 சென்றி கிரே (1.5 கிரே) தேவை என்றும் அதே விளைவைத் தோற்றுவிக்க 100 சென்றி கிரே நியூட்ரான் கதிரும் தேவை என்றால், ஒ.உ.வி.150÷100=1.5 ஆகும்.

வெளியிணைப்புகள்