ஓம் (மின்னியல்)

ஓம் (ஆங்கிலம்: Ohm) என்பது தடையை அளப்பதற்கான சர்வதேச அலகு ஆகும்.[1] இதனுடைய குறியீடு Ω ஆகும்.[2] இவ்வலகுக்கு சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3]
வரைவிலக்கணம்
கடத்தியொன்றில் இரு புள்ளிகளுக்கிடையிலான அழுத்த வேறுபாடு ஒரு வோல்ட்டு ஆகவும் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓர் அம்பியர் ஆகவும் இருப்பின், அக்கடத்தியின் தடை ஓர் ஓம் ஆகும்.[4]
இலத்திரனியல் ஆவணங்களில் Ω குறியீடு
இலத்திரனியல் ஆவணங்களில் (மீப்பாடக் குறிமொழி உள்ளடங்கலாக) Ω குறியீட்டினைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் அவசியமாகும். சில மென்பொருட்களில் எழுத்துரு ஆதரவு அளிக்காத நிலையில் Ω குறியீடானது, W என்ற குறியீட்டின் மூலம் காட்டப்படும். உதாரணமாக, 100 Ω தடையி என்பதற்குப் பதிலாக 100 W தடையி என்று காட்டப்படும். வார்ப்புரு:ஆதாரம்
ஒருங்குறியில் Ω குறியீட்டிற்கு U+2126 என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.[6]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ [[[:வார்ப்புரு:Cite web]] அனைத்துலக முறை அலகுகள் வார்ப்புரு:ஆ]
- ↑ ஓம் வார்ப்புரு:ஆ
- ↑ [[[:வார்ப்புரு:Cite web]] சார்ச்சு சைமன் ஓம் வார்ப்புரு:ஆ]
- ↑ ஓம் என்றால் என்ன வார்ப்புரு:ஆ?
- ↑ ஓமின் விதி வார்ப்புரு:ஆ
- ↑ ஒருங்குறி வரியுரு 'ஓம் குறி (U+2126)' வார்ப்புரு:ஆ