ஓல்மியம் பாசுபைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox ஓல்மியம் பாசுபைடு (Holmium phosphide) என்பது HoP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியமும்ம் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] இது தண்ணீரில் கரையாது. அடர் நிறத்தில் படிகங்களாக உருவாகும்.

தயாரிப்பு

வெற்றிடத்தில் அல்லது மந்த வாயுச் சூழலில் தூளாக்கப்பட்ட ஓல்மியத்தையும் சிவப்பு பாசுபரசையும் சேர்த்து சூடாக்கினால் ஓல்மியம் பாசுபைடு உருவாகிறது.

Ho+PHoP

இயற்பியல் பண்புகள்

ஓல்மியம் பாசுபைடு கனசதுர வடிவத்தில் அடர்நிறப் படிகங்களாக உருவாகிறது. காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட இது நீரில் கரையாது.

சோடியம் குளோரைடு கட்டமைப்பில் உள்ள மோனோநிக்டைடு என்ற அரிய வகை சேர்மங்களுடன் இது வகைப்படுத்தப்படுகிறது.[4] தாழ்வெப்பநிலைகளில் ஓல்மியம் பாசுபைடு அயக் காந்தப் பண்புடன் காணப்படுகிறது.[5][6]

வேதியியல் பண்புகள்

நைட்ரிக் அமிலத்துடன் ஓல்மியம் பாசுபைடு தீவிரமாக வினைபுரிகிறது.

பயன்கள்

உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் பிசுமத் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:ஓல்மியம் சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபரசு சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபைடுகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஓல்மியம்_பாசுபைடு&oldid=1533" இலிருந்து மீள்விக்கப்பட்டது