காமா சார்பியம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
மெய்யெண் அச்சின் பகுதியில் காமா சார்பியத்தின் மதிப்பு

கணிதத்தில் காமா சார்பியம் அல்லது காமா செயற்கூறு (Gamma function) என்பது தொடர்பெருக்கம் என்னும் கணிதச் சார்பியத்தின் ஒரு நீட்சி ஆகும். அதாவது கீழ்நோக்கி ஓரெண் குறைவான தொடர்பெருக்கம், மெய்யெண்ணாக இருப்பினும் சிக்கலெண்ணாக இருப்பினும். இந்த சார்பியத்தை கிரேக்கப் பெரிய எழுத்தாகிய காமா வார்ப்புரு:Math என்பதால் குறிப்பது வழக்கம். வார்ப்புரு:Math என்பது நேர்ம முழு எண்ணாக இருந்தால்,

Γ(n)=(n1)!

காமா சார்பியம் என்பது நேர்ம எண்ணாக அல்லாத எல்லா சிக்கலெண்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஒன்று. நேர்ம மெய்யெண் பகுதி கொண்ட சிக்கலெண்களுக்கு, குவிந்தடையும் ஏதேனும் ஓரெல்லையாவது முடிவிலியாக அல்லது அடைவெல்லையாக அமைந்த செவ்வியதல்லாத நுண்தொகையீடு வழியாக வரையறை செய்யப்படும்:

Γ(z)=0xz1exdx

இந்தக் காமா சார்பியம் பல்வேறு நிகழ்தகவு பகிர்வமைப்புகளில் (probability-distribution) காணப்படுகின்றது. பல்வேறு புள்ளியியல் சேர்வியல் துறைகளிலும் காணப்படுகின்றது.

வரையறை

முதன்மையான வரையறை

வார்ப்புரு:Math என்னும் குறியீடு இலெகந்தர்( Legendre) என்பாரால் வழங்கப்பெற்றது[1] வார்ப்புரு:Math என்னும் ஒரு சிக்கெலெண்ணின் மெய்யெண் பகுதி நேர்ம எண்ணாக இருந்தால் (வார்ப்புரு:Math), தொகையீடு

Γ(z)=0xz1exdx

முற்றாகக் குவிந்தடையும் (converges absolutely) ஒன்றாகும்; இது ஆய்லரின் இரண்டாம் வகைத் தொகையீடு என்று அறியப்படுகின்றது (ஆய்லரின் முதல்வகைத் தொகையீடு என்பது பீட்டா சார்பியம் ஆகும்) .[1] பகுதியாக செய்யப்படும் தொகையீட்டு முறைப்படி கீழ்க்கண்டவாறு அறியலாம்:

Γ(z+1)=0xzexdx=[xzex]0+0zxz1exdx=limx(xzex)(0e0)+z0xz1exdx
x ஆக xzex0,
Γ(z+1)=z0xz1exdx=zΓ(z)

Γ(1) என்பதைக் கணக்கிடலாம்:

Γ(1)=0x11exdx=[ex]0=limx(ex)(e0)=0(1)=1

Γ(1)=1 என்னும் உண்மையையும் Γ(n+1)=nΓ(n) என்பதையும் கருத்தில் கொண்டால்,

Γ(n)=123(n1)=(n1)!

என்பது எல்லா n நேர்ம எண்களுக்கும் பொருந்தும். இதனை அடுத்துத்தூண்டல் நிறுவல் (proof by induction) முறை எனக் கொள்ளலாம். முற்றொருமையான Γ(z)=Γ(z+1)z என்பதைப் பயன்படுத்தி Γ(z) சார்பியத்தை தொகையீட்டு அமைப்பில் சுழியமாகவோ அதற்கும் கீழானதாகவோ இல்லாத z என்னும் எல்லாச் சிக்கலெண்ணுக்கும் பொருந்துமாறு மேரோவுருவ சார்பியமாக[2] நீட்சி பெறச் செய்யலாம்.[1]

இந்த நீட்சிபெற்ற பார்வையிலும் வடிவத்திலும்தான் பொதுவாக காமா சார்பியம் என அறியப்படுகின்றது[1].

மாற்று வரையறைகள்

முடிவிலாப் பெருக்கல் வடிவில் ஆய்லர் தரும் வரையறை

சிக்கலெண் வார்ப்புரு:Math இன் தொடர் பெருக்கமாகிய வார்ப்புரு:Math என்பதற்கு தோராயம் கண்டறிய கீழ்க்காணும் முறை பயன்படும் ஒன்றாகத் தெரிகின்றது. முதலில் பெரிய முழு எண்ணாகிய ஒரு வார்ப்புரு:Math என்பதன் தொடர்பெருக்கமாகிய வார்ப்புரு:Math -ஐக் கணக்கிடலாம். பின்னர் அதனைப் பயன்படுத்தித் தோராயமாக வார்ப்புரு:Math என்பதைக் கணக்கிடலாம், பின்னர் மீளுறும் சமன்பாட்டை வார்ப்புரு:Math முறை பின்னோக்கிப் பயன்படுத்தி, வார்ப்புரு:Math என்பதனைத் தோராயமாகக் கண்டறியலாம். கடைசியாக வார்ப்புரு:Math என்பது முடிவிலியாக சென்றடையும்பொழுது தோராயம் என்பது முழுதும் சரியானதாக ஆகிவிடும்.

குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட முழுவெண் வார்ப்புரு:Mvar -உக்கு, கீழ்க்காணுமாறு எழுதலாம்.

limnn!(n+1)m(n+m)!=1,

இதே சமன்பாடு அந்த ஏதோவொரு குறிப்பிட்ட வார்ப்புரு:Mvar என்பதை ஏதோவொரு குறிப்பிட்ட சிக்கெலெண் வார்ப்புரு:Mvar -ஆக மாற்றினாலும் பொருந்துவதாகும்.

limnn!(n+1)z(n+z)!=1.

வார்ப்புரு:Math ஆல் இருபக்கத்தையும் பெருக்கினால்,

z!=limnn!z!(n+z)!(n+1)z=limn1n(1+z)(n+z)(n+1)z=limn1n(1+z)(n+z)[(1+11)(1+12)(1+1n)]z=n=1[11+zn(1+1n)z].

இந்த முடிவிலிப் பெருக்க வாய்பாடு எதிர்ம முழுவெண் அல்லாத எல்லா வார்ப்புரு:Mvar சிக்கலெண்களுக்கும் குவியடைவு பெறும். எதிர்ம முழுவெண் இருந்தால் வார்ப்புரு:Math என்னும் மீளுறும் சமன்பாட்டில் பின்னோக்கிச் செல்லும்பொழுது வார்ப்புரு:Math என்பதில் சுழியத்தால் வகுபடும் நிலை வரும்.

சில காமா சார்பிய மதிப்புகள்

காமா சார்பியத்தின் மதிப்புகள் சில:

Γ(32)=43π2.363271801207Γ(12)=2π3.544907701811Γ(12)=π1.772453850906Γ(1)=0!=1Γ(32)=12π0.886226925453Γ(2)=1!=1Γ(52)=34π1.329340388179Γ(3)=2!=2Γ(72)=158π3.323350970448Γ(4)=3!=6

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வார்ப்புரு:Reflist

  1. 1.0 1.1 1.2 1.3 வார்ப்புரு:Cite journal
  2. meros (μέρος) என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் பகுதி (part))
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=காமா_சார்பியம்&oldid=1409" இலிருந்து மீள்விக்கப்பட்டது