கியூரியம்(III) நைட்ரேட்டு
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox கியூரியம்(III) நைட்ரேட்டு (Curium(III) nitrate) என்பது Cm(NO3)3 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2][3]
தயாரிப்பு
கியூரியமும் நைட்ரிக் அமிலமும் வினைபுரிவதால் கியூரியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
கியூரியம்(III) நைட்ரேட்டு தயாரிப்பு முறைகளின் அடிப்படையில் ஒரு நீரேற்றாகவோ அல்லது நீரிலியாகவோ திண்ம நிலையில் காணப்படுகிறது. நீரேற்று வடிவம் படிக நீரில் 90-100 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. நீரிலியோ 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் கியூரியம்(IV) ஆக்சைடாக சிதைவடைகிறது.[4]
பயன்
கியூரியம்(IV) ஆக்சைடு தயாரிக்க கியூரியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.