குணகம் (இயற்பியல்)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Unreferenced இயற்பியலில் குணகம் அல்லது கெழு என்பது, ஒரு பொருளின் பண்பை மற்ற கூறுகளால் அளவிடும் பொழுதோ கருத்தியலாகக் கணிக்கும் பொழுதோ அப்பொருட்பண்பின் சிறப்புத் தன்மையைக் காட்டும் மாறா எண் ஆகும். எடுத்துக்காட்டாக ஒரு பரப்பில் இருந்து வெளிவிடும் வெப்ப ஆற்றல் (j) அந்தப் பொருளின் வெப்பநிலைக்கு (T) நான்காம் படியதாக (T4) இருக்கும் என்று கூறும் இசுட்டெஃவான்-போல்ட்ஃசுமன் விதியாகிய (Stefan-Boltzamann Law)

j=σT4.

என்பதில் σ என்பது ஒரு பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் கெழு அல்லது குணகம் ஆகும். அதாவது வெளிவிடும் வெப்ப ஆற்றலை (j), மாறும் பொதுக்கூறாகிய நான்காம் படிய வெப்பநிலையால் (T4) வகுத்தால் அப்பொருளின் சிறப்புத்தன்மையைக் காட்டும் மாறா எண்ணாகிய σ ஐக் காட்டும். இங்கு σ என்பது கெழு அல்லது குணகம். மேலும் பொதுமைப் படுத்தினால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாறும் கூறுகளின் முன்னே அவற்றின் பெருக்குத்தொகையாக நிற்கும் மாறா எண்கள் கெழு அல்லது குணகம் எனப்படும்.

வெப்ப விரிவுக் குணகம், உராய்வுக் குணகம் என்பன இயற்பியல் குணகங்களுக்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள். பொதுவாக ஒரு பொருள் சூடாகும்போது அது விரிவடையும். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட (ஓரலகு) அளவுடைய அப்பொருள் எந்த அளவுக்கு விரிவடைகின்றது என்று அளவிட்டால் அது அப்பொருளின் இயல்பின் அளவீடாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரு பாகை வெப்பநிலையைக் கூட்டி அந்தச் சூட்டால் ஒரு பொருள் நீட்சி அடைந்தால், நீளும் அளவை முதலில் இருந்த அளவால் வகுத்தால் பெறும் மாறிலியே வெப்பவிரிவுக் குணகம். அதுபோலவே இரண்டு மேற்பரப்புக்கள் ஒன்றின் மீது ஒன்று தொட்டுக்கொண்டு அசைய முயலும்போது உருவாகக்கூடிய உராய்வுத் தன்மையின் அளவீட்டைக் குறிக்கும் ஒரு மாறிலியே குறித்த நிலைமையில் அம் மேற்பரப்புகள் தொடர்பிலான உராய்வுக் குணகம் எனப்படும். இக் குணகங்கள், பொருட்களின் குறித்த இயல்புகள் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளைக் கணித்தறிவதற்கு உதவுகின்றன. இது, இவ்வியல்புகளை நன்மையளிக்கும் விதத்தில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும், ஏற்படக்கூடிய வேண்டாத விளைவுகளைத் தடுப்பதற்கான நடைமுறைகளைக் கைக்கொள்வதற்கும் பயன்படுகிறது.

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=குணகம்_(இயற்பியல்)&oldid=419" இலிருந்து மீள்விக்கப்பட்டது