குண்டுத் திருகு

குண்டுத் திருகு (ஆங்கிலத்தில்: BALL SCREW) ஒரு நேரோட்ட இயக்க இயந்திரமாகும், இது சுழற்சி நகர்வை சிறிதளவு உராய்வுடன் நேரோட்ட நகர்வாக மாற்றுகின்றது. இது துல்லியமாகச் செயல்பட ஒரு திரிக்கப்பட்ட தண்டு அமைப்பானது 'பந்து தாங்கு'(Ball bearing) நகரும் வண்ணம் வட்டவடிவப் பாதையை அளிக்கிறது.
பயன்பாடுகள்
குண்டுத் திருகு அமைப்பானது, வானூர்தி, ஏவுகணை, வாகனங்களில் நகர்வு கட்டுப்பாட்டு அமைப்புகளிலும், மேலும் இயந்திர கருவிக்கள், ரோபோக்கள் மற்றும் துல்லியமான நகர்வுகள் தேவைப்படும் உபகரணங்களான குறைக்கடத்தி உற்பத்தி இயந்திரங்களில் ஸ்டெப்பர் மோட்டார்களில் 'அதிதுல்லிய குண்டுத் திருகுகள்' பயன்படுத்தப்படுகின்றன.
நன்மைகள்
குண்டுத் திருகுகள் 90% துல்லியமானது. திருகுக்கும், நட்டுக்கும் இடையே சிறிதளவே உராய்வுகள் ஏற்படுவதால் குறைந்தளவே பராமரிப்பு மற்றும் உயவு எண்ணெய் தேவைப்படுகிறது, இதனால் இதன் வாழ்நாள் கூடுகின்றது.[1]
சமன்பாடு
T ஆனது முறுக்கு விசை F ஆனது நேரியல் விசை l ஆனது குண்டுத் திருகின் தண்டு v ஆனது குண்டுத் திருகின் திறன்