குரோமியம்(III) ஐதராக்சைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox குரோமியம்(III) ஐதராக்சைடு (Chromium(III) hydroxide) என்பது Cr(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இச்சேர்மம் நிறப்பூச்சாக, சாயமூன்றியாக மற்றும் வினையூக்கியாகக் கரிம வேதியியல் வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]

குரோமியம்(III) ஐதராக்சைடு வரையறுக்கப்படாத கட்டமைப்பும் குறைந்த கரைதிறனும் கொண்ட பலபடியாகும். ஈரியல்பு கரைப்பானிலும் வலுவான காரங்கள் மற்றும் வலுவான அமிலங்கள் இரண்டிலும் கரைகிறது.[2]

காரத்தில்: Cr(OH)A3+OHACrOA2A+2HA2O
அமிலத்தில்: Cr(OH)A3(OHA2)A3+3HA+Cr(OHA2)A6A3+

குரோமியம் உப்புக் கரைசலுடன் அமோனியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்ப்பதன் மூலம் குரோமியம்(III) ஐதராக்சைடு பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.

தூய Cr(OH)3 2020 ஆம் ஆண்டு வரை கனிம இனங்களில் இருப்பதாக அறியப்படவில்லை. இருப்பினும், ஆக்சி ஐதராக்சைடின் மூன்று இயற்கையான பலலுருவங்கள் அறியப்படுகின்றன: பிரேசுவெல்லைட், கிரிமால்டைட்டு மற்றும் கயனைட்டு என்பன இவ்வுருவங்களாகும். [3][4][5][6]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:குரோமியம் சேர்மங்கள் வார்ப்புரு:ஐதராக்சைடுகள்

  1. வார்ப்புரு:Cite book
  2. Rai, Dhanpat; Sass, Bruce M.; Moore, Dean A. "Chromium(III) hydrolysis constants and solubility of chromium(III) hydroxide" Inorganic Chemistry 1987, volume 26, pp. 345-9. வார்ப்புரு:Doi
  3. வார்ப்புரு:Cite web
  4. வார்ப்புரு:Cite web
  5. வார்ப்புரு:Cite web
  6. வார்ப்புரு:Cite web