குரோவர் தேடுமுறை

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

குரோவர் தேடுமுறை என்பது லோவ் குமார் குரோவர் (Lov Kumar Grover) என்ற குவாண்டக் கணினியியலாளரால் உருவாக்கப்பட்ட தேடுமுறை ஆகும்.

ஒரு தொலைபேசி எண் நிரலிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணை பல முறைகளில் தேடலாம். ஒவ்வொரு எண்ணாகப் பார்த்துத் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஒழுங்கற்ற முறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவும் தேடலாம், அப்படித் தேடும் பொழுது, வேண்டும் எண்ணை விட்டுவிடுவதற்கும் வாய்ப்பு உண்டு. இது மரபார்ந்தக் கணினியில் மிக முக்கியமான, அதேநேரம் மிகவும் சிக்கலானக் கேள்வியாகும்.

மரபார்ந்தக் கணினிமுறையில், N பொருட்களைத் தேடும் பொழுது O(N) க்கும் சற்றுக் குறைவான எண்ணிக்கையிலேயேத் தேடவேண்டி வரும். ஆனால் ஒரு குவாண்டக்கணினியை வைத்து, குரோவர் தேடுமுறை கொண்டு குவாண்ட நிலைகூடியமைதல் என்ற பண்பின் விளைவாக, O(N) அளவிலேயேத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். அதாவது, 100 பொருட்களில் ஒரு பொருளை, பத்து முறைத் தேடுவதிலேயே கண்டறிய முடியும்.[1]

உசாத்துணை

வார்ப்புரு:Reflist

  1. Nielsen, M.A. and Chuang, I.L. Quantum computation and quantum information. Cambridge University Press, 2000
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=குரோவர்_தேடுமுறை&oldid=1177" இலிருந்து மீள்விக்கப்பட்டது