குறிகை-குவையமாக்கல்-இரைச்சல் விகிதம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

குறிகை-குவையமாக்கல்-இரைச்சல் விகிதம் (கு.கு.இ.வி) (Signal-to-Quantization-Noise Ratio, SQNR or SNqR) என்பது துடிப்புக் குறியீடு ஏற்றம் (துகுஏ) மற்றும் பல்லூடக விலக்கி போன்ற எண்முறையாக்கத் திட்டமுறைகளில் பரவலாக பயன்படக்கூடிய ஒரு அளவுகோல் ஆகும். இது ஒப்பு-இலக்க மாற்றத்தில் ஏற்படும் குவையமாக்கல் பிழைக்கும், பெரும வரைவுக் குறிகை வலிமைக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது.

SNR=3×22n1+4Pe×(22n1)mm(t)2mp(t)2

கோட்குரிப்பைப் பின்வருமாறு வருவிப்போமாக. இதற்கு முதலில் குவையமயமாக்கல் முறையைப் புரிந்து கொள்வது அவசியம். பொதுவான ஒலி மற்றும் ஒளிக் குறிகைகள் தொடர்ச்சியான எண் மதிப்பைக் கொண்டிருக்கும். இவற்றை மின்னணுச் சாதனங்களில் வகைக் குறிக்கும் போது, தொடர் நிலை அன்றி, பிரி நிலைக் குறிப்பு உகந்ததாகும். குறிகையின் குறைந்த பட்ச மதிப்பு vmin என்றும், அதிக பட்ச மதிப்பு vmax என்றும் வைத்துக் கொள்வோம்.

வார்ப்புரு:குறுங்கட்டுரைகள்