கோபால்ட்(II) சிடீயரேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox கோபால்ட்(II) சிடீயரேட்டு (Cobalt(II) stearate) C36H70CoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] கோபால்ட்டு உலோகமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து இந்த உலோகச் சேர்மம் உருவாகிறது. கோபால்ட் சிடீயரேட்டு சேர்மம் ஓர் உலோக சோப்பு, அதாவது கொழுப்பு அமிலத்தின் உலோக வழித்தோன்றல் என வகைப்படுத்தப்படுகிறது.[3]

தயாரிப்பு

கோபால்ட்(II) குளோரைடு மற்றும் சோடியம் சிடீயரேட்டு சேர்மங்களின் பரிமாற்று வினையில்கோபால்ட் சிடீயரேட்டு உருவாகிறது:

𝖢𝗈𝖢𝗅𝟤+𝟤𝖢𝟣𝟩𝖧𝟥𝟧𝖢𝖮𝖮𝖭𝖺  𝖢𝗈(𝖢𝟣𝟩𝖧𝟥𝟧𝖢𝖮𝖮)𝟤+𝟤𝖭𝖺𝖢𝗅

இயற்பியல் பண்புகள்

கோபால்ட்(II) சிடீயரேட்டு ஓர் ஊதா நிறச் சேர்மமாக பல்வேறு விதமான படிக அமைப்புகளில் தோன்றுகிறது.

நீரில் இது கரையாது.

பயன்கள்

கோபால்ட்(II) சிடீயரேட்டு இரப்பருக்கான உயர் செயல்திறன் பிணைப்பு முகவராகும். இயற்கை இரப்பர், சிசுட்டீன், சிடைரீன்-பியூடடாடையீன் இரப்பர் மற்றும் இவற்றின் சேர்மங்களுடன் பித்தளை அல்லது துத்தநாகம் பூசப்பட்ட எஃகு தண்டு அல்லது உலோகத் தகடுகள் மற்றும் பல்வேறு வெற்று எஃகு ஆகியவற்றுடன் எளிதில் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வல்லதாகும். குறிப்பாக பித்தளையுடன் பல்வேறு தடிமன்களில் முலாம் பூசுவதற்கு. கோபால்ட் சிடீயரேட்டு ஏற்றதாகும்.[4]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:கோபால்ட் சேர்மங்கள்