சிரியசு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

சிரியசு என்பது இரவு வானில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பொலிவு மிக்கது. தோற்ற ஒளியளவு −1.46[1] கொண்ட இவ்விண்மீன், கானிசு மேஜர் என்ற விண்மீன் தொகுதியின் பொலிவுமிக்க விண்மீனாகும் (α Canis Major)[2]. ஓரியன் விண்மீன் தொகுதிக்கு அருகில் காணப்படும்[3] இது, இரும விண்மீன் அமைப்பின் ஓர் அங்கமாகும். சிரியசு A என்றும் அழைக்கப்படும் இவ்விண்மீனுடன் சேர்ந்து காணப்படும் மற்றொரு விண்மீனான சிரியசு B, ஒரு வெண்குறுளை மீனாகும்[4]. சிரியசு Bன் அளவு புவியைக் காட்டிலும் சிறியதாக இருப்பதால், திறன் வாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியுடன் மட்டுமே இதைக் காண இயலும்[5].

புவியுடன் ஒப்பிடும் போது சிரியசு B

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சிரியசு&oldid=1555" இலிருந்து மீள்விக்கப்பட்டது