சீபெக் விளைவு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
பல்வேறு சீபெக்கு குணகங்களைக் (p-, n- குறைக்கடத்திகள்), கொண்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெப்ப மின்சுற்று ஒன்று வெப்பமின் இயற்றியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமை முறிவு ஏற்படும் போது, மின்னோட்டம் தடைப்படுவதை அடுத்து, இச்சுற்று வெப்பநிலை-உணரியுடன் கூடிய வெப்ப இணை ஆகச் செயல்படுகிறது.

இரு வேறுபட்ட உலோகக் கம்பிகளை இணைத்து ஒரு சுற்று ஏற்படுத்தி சந்திகளை வெவ்வேறு வெப்பநிலையில் இருக்குமாறு செய்தால், ஒரு மின்னோட்டம் கம்பிச் சுற்றில் பாயக் காணலாம். இவ்விளைவு சீபெக் விளைவு (Seebeck effect) எனப்படும். இவ்வமைப்பு வெப்ப இணை (thermocouple) எனப்படும். இதனை வெப்பநிலை விளைவு என்றும் அழைப்பர். தாமஸ் ஜோகான் சீபெக் என்பவர் கண்டுபிடித்தமையால் இவ்விளைவுக்கு அவர் பெயரிடப்பட்டது.

சீபெக்கு விளைவு மின்னியக்கு விசைக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். மின்னோட்ட அடர்த்தி பின்வருமாறு தரப்படும்:

𝐉=σ(V+𝐄emf),

இங்கு V மின்னழுத்தம்[1] σ மின்கடத்துதிறன்.

பொதுவாக சீபெக்கு விளைவு மின்னியக்கு விசையின் தோற்றம் மூலம் விளக்கப்படுகிறது:

𝐄emf=ST,

இங்கு S என்பது பொருள் ஒன்றின் சீபெக்கு குணகம் (அல்லது வெப்ப மின்திறன்), T வெப்பநிலையின் சாய்வுவீதம்.

ஆதாரங்கள்

வார்ப்புரு:Reflist

en:Thermoelectric effect#Seebeck effect

  1. இங்கு அழுத்தம் என்பது வோல்ட்மீட்டர் அழுத்தத்தைக் குறிக்கும் V=μ/e, இங்கு μ பெர்மி ஆற்றல் நிலை.
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சீபெக்_விளைவு&oldid=869" இலிருந்து மீள்விக்கப்பட்டது