சூல் (அலகு)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Unit சூல் (joule; ஜூல்; இலங்கை வழக்கு: யூல், குறியீடு: J) என்பது ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகுகள் சார்ந்த அலகு ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான சேமுசு பிரிசுகாட்டு சூல் என்பவரின் பெயரைத் தழுவி இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1][2][3]

விளக்கம்

ஒரு சூல் என்பது, ஒரு நியூட்டன் அளவுள்ள விசை ஒன்று அவ்விசையின் திசையில் ஒரு மீட்டர் நகரும் பொழுது செய்யப்படும் வேலையின் அளவு ஆகும். இந்த அளவு நியூட்டன் மீட்டர் என்றும் குறிக்கப்படுவது உண்டு. நியூட்டன் மீட்டர் "N.m" என்னும் குறியீட்டால் எழுதப்படும்.

அடிப்படை அலகுகளில்,

1J=1Nm
1J=1kgm2s2

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. American Heritage Dictionary of the English Language, Online Edition (2009). Houghton Mifflin Co., hosted by Yahoo! Education.
  2. The American Heritage Dictionary, Second College Edition (1985). Boston: Houghton Mifflin Co., p. 691.
  3. McGraw-Hill Dictionary of Physics, Fifth Edition (1997). McGraw-Hill, Inc., p. 224.
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சூல்_(அலகு)&oldid=286" இலிருந்து மீள்விக்கப்பட்டது