செனான் ஆக்சி நான்மபுளோரைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox செனான் ஆக்சி நான்மபுளோரைடு (Xenon oxytetrafluoride ) என்பது XeOF4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய [[கனிம வேதியியல்] சேர்மமாகும். மற்ற செனான் ஆக்சைடுகளைப் போலவே செனான் ஆக்சி நான்மபுளோரைடும் அதிகபட்ச வினைத்திறனும் நிலைப்புத்தன்மையும் இல்லாமல் காணப்படுகிறது நீருடன் சேர்ந்த நீராற்பகுப்பு வினையின் போது ஐதரசன் புளோரைடு போன்ற பேரிடர் விளைவிக்கும் அளவுக்கு அபாயமானதும் அரித்துக் கரைக்கும் பண்புடைய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

2XeOF4+4H2O2Xe+8HF+3O2

இவற்றுடன் சிறிதளவு ஓசோன் மற்றும் புளோரின் போன்றவையும் வினையில் உருவாகின்றன. இவ்வினை மிகவும் ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். செனான் ஆக்சி நான்மபுளோரை எல்லா சூழ்நிலைகளிலும் தண்ணீர் மற்றும் நீராவி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளாத வகையில் தனித்து வைத்திருக்க வேண்டும். வினைகள் XeOF4 தண்ணீருடன் கீழ்கண்ட படிநிலைகளில் செனான் ஆக்சி நான்மபுளோரைடு வினைபுரிகிறது.

XeOF4+H2OXeO2F2+2HF
XeO2F2+H2OXeO3+2HF

அபாயகரமான வெடிபொருளான XeO3 செனான் மற்றும் ஆக்சிசனாக சிதைவடைகிறது.

2XeO32Xe+3O2

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:அருமன் வாயுக்களின் சேர்மங்கள்