செருமேனியம் இருபுரோமைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

செருமேனியம் இருபுரோமைடு (Germanium dibromide) GeBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். செருமேனியத்தின் புரோமைடு உப்பாக இது கருதப்படுகிறது.

தயாரிப்பு

செருமேனியத்தின் டெட்ராபுரோமைடை செருமேனியம் அல்லது துத்தநாகம் தனிமத்துடன் சேர்த்து ஒடுக்க வினையின் மூலம் குறைத்து செருமேனியம் இருபுரோமைடு தயாரிக்கப்படுகிறது.[1][2]

Ge+GeBrA42GeBrA2

பண்புகள்

செருமேனியம் இருபுரோமைடு என்பது மஞ்சள்-வெள்ளை நிறத்தில் காணப்படும் ஒரு திண்மப் பொருளாகும். எத்தனால் மற்றும் அசிட்டோனில் கரைகிறது. செருமேனியத்தின் டெட்ராபுரோமைடாகவும் செருமேனியமாகவும் இது விகிதாச்சாரமின்றி சிதைவடைகிறது. நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டால் செருமேனியம் ஈராக்சைடாக மாற்றமடைகிறது.

P21/c (எண். 14) என்ற இடக்குழுவும், a = 11.68 Å, b = 9.12 Å, c = 7.02 Å, மற்றும் β = 101.9° என்ற அணிக்கோவை அளவுருக்களும் கொண்டு ஒற்றைச் சரிவச்சுப் படிகத்திட்டத்தில் செருமேனியம் இருபுரோமைடு படிகமாகிறது.[1][3] ஈதர் கரைப்பானில் உள்ள வளையபெண்டா டையீனைல் சோடியம் அல்லது வளையபெண்டா டையீனைல் தாலியத்துடன் வினைபுரிந்து செருமேனோசீனை உருவாக்குகிறது.[4]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:செருமேனியம் சேர்மங்கள்

  1. 1.0 1.1 வார்ப்புரு:Holleman&Wiberg
  2. Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 724.
  3. வார்ப்புரு:Citation
  4. வார்ப்புரு:Cite journal