சோடியம் ஓசோனைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox சோடியம் ஓசோனைடு (Sodium ozonide) NaO
3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். ஆக்சிசன் மிகுதியாக உள்ள சோடியம் சேர்மமாக காணப்படும் இதில் சோடியம் நேர்மின் அயனியும் ஓசோனைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்கியுள்ளன. செஞ்சாய்சதுரக் கட்டமைப்பை சோடியம் ஓசோனைடு வெளிப்படுத்துகிறது.[1]

சோடியம் ஐதராக்சைடுடன் ஓசோனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் சோடியம் ஓசோனைடு உருவாவதாக சில பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.[2] ஆனால் உருவாகும் விளைபொருள் மாசு கலந்த சேர்மமாக இருக்கும் என்றும் அறை வெப்பநிலையில் கூறப்பட்ட நிலைத்தன்மை மற்ற அறிக்கைகளோடு முரண்பட்டதாகவும் உள்ளது.[3] பொட்டாசியம் ஓசோனைடு, ருபீடியம் ஓசோனைடு, சீசியம் ஓசோனைடு ஆகிய ஒசோனைடுகளுடன் ஒப்பிடுகையில் சோடியம் ஓசோனைடு இப்பண்பில் மாறுபடுகிறது. அவை நேரடியாக அவ்வுலோகத்துடன் ஓசோனைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலேயே கிடைத்து விடுகின்றன. ஆனால் இங்கு அமோனியா கரைசலும் கிரிப்டண்டுகளும் அயனிப் பரிமாற்ற வினையும் தேவையாகின்றது.[1][4]

அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மை அற்றதாகவும் -10 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சோடியம் மீயாக்சைடு, ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது.[5]

2NaOA32NaOA2+OA2

இருப்பினும் -18 பாகை செல்சியசு வெப்பநிலையில் சில மாதங்களுக்குச் சேமித்து வைக்க இயல்கிறது.[1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:சோடியம் சேர்மங்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சோடியம்_ஓசோனைடு&oldid=1514" இலிருந்து மீள்விக்கப்பட்டது