டெட்ரா ஐதராக்சிடைபோரான்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

டெட்ரா ஐதராக்சிடைபோரான் (Tetrahydroxydiboron) என்பது B2H4O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வேதியியல் வினையாக்கியான இச்சேர்மத்தைப் பயன்படுத்தி போரானிக் அமிலங்கள் தயாரிக்கப்படுகின்றன [1].

தயாரிப்பு

போரான் டிரைகுளோரைடுடன் ஆல்ககால்களைச் சேர்த்து வினைபுரியச் செய்யும் தயாரிப்பு முறை 1931 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையில் டைமெத்தாக்சிபோரான் குளோரைடு (B(OCH3)2Cl) தயாரிக்கப்பட்டது [2] . இச்சேர்மத்திலிருந்து இகோன் வைபெர்க் மற்றும் வில்லெம் ருச்மான் ஆகியோர் டெட்ரா ஐதராக்சிடைபோரானை முதலில் போரான் – போரான் பிணைப்பை அறிமுகப்படுத்தும் முறையில் தயாரித்தனர். இதற்காக இவர்கள் (B(OCH3)2Cl) உடன் சோடியம் சேர்த்து ஒடுக்க வினையை நிகழ்த்தினர். விளைபொருளான டெட்ரா ஐதராக்சிடைபோரானை பின்னர் நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினர். இம்முறையில் தயாரிக்கப்பட்ட போரிக் அமிலத்தை துணை-போரிக் அமிலம் என்று பெயரிட்டு அழைத்தனர் .[3] இத்தயாரிப்பு முறையில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தமுடியும்.

BCl3    HClCHA3OH   B(OCH3)2Cl    NaClNa   B2(OCH3)4    CHA3OHHA2O   B2(OH)4

ஒட்டுமொத்தமாக:     2 BCl3   +   2 Na   +   4 H2O   →   B2(OH)4   +   2 NaCl   +   4 HCl

வினைகள்

90 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தப்படும் போது டெட்ரா ஐதராக்சிடைபோரான் நீர் நீக்கமடைந்து பலபடிம போரான்(II) ஆக்சைடாக மாறுகிறது. வெப்பநிலை 220 பாகை செல்சியசுக்கு மிகுதியானல் மட்டுமே இச்சேர்மம் முழுமையாக நீர்நீக்கமடைகிறது [4]. டெட்ரா ஐதராக்சிடைபோரான் ஒரு ஒடுக்கும் முகவராகும். இதனுடைய நீர்க்கரைசல் மெல்ல ஐதரசன் வாயுவை வெளிவிடுகிறது [3].

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist