தங்கம்(I) சயனைடு
தங்கம்(I) சயனைடு (Gold(I) cyanide) என்பது AuCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கம்(I) அயனியின் இருமச் சயனைடு என இது வகைப்படுத்தப்படுகிறது. நெடியற்றதாகவும் சுவையற்றதாகவும் மஞ்சள் நிறத்துடன்[1] ஒரு திண்மமாக தங்கம்(I) சயனைடு காணப்படுகிறது. ஈரமான தங்கம்(I) சயனைடு நிலைப்புத்தன்மை அற்றதாகும்.
தயாரிப்பு
பொட்டாசியம் இருசயனோ ஆரேட்டுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தங்கம்(I) சயனைடு வீழ்படிவாகக் கிடைக்கிறது.
தங்கம்(III) குளோரைடுடன் பொட்டாசியம் சயனைடு சேர்த்து வினைபுரியச் செய்தாலும் தங்கம்(I) சயனைடு உருவாகிறது.[2]
வினைகள்
தங்கம்(I) சயனைடு திண்மமானது நீரில் கரையக்கூடிய சேர்மங்களை பல்வேறு சயனைடுகள், ஐதராக்சைடுகள், அமோனியா, தயோசல்பேட்டுகள் மற்றும் ஐதரோசல்பேட்டுகள் போன்ற ஈந்தணைவிகளுடன் உருவாக்குகிறது.[2]
பெரும்பாலான தங்கம் சேர்மங்களைப் போலவே, இதுவும் வெப்பமடையும் போது உலோகத் தங்கமாக மாறுகிறது.
கட்டமைப்பு
தங்கம்(I) சயனைடானது AuCN இன் நேரியல் சங்கிலிகளைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும். அதாவது ஒவ்வொரு Au(I) மையமும் கார்பன் மற்றும் நைட்ரசனுடன் பிணைக்கப்பட்டுள்ளன. a = 3.40 Å மற்றும் c = 5.09 Å அடையாள அளவுருக்களுடன் அறுகோண வடிவத்தை ஏற்றுள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ Meyers Konversations-Lexikon, 1888: Goldcyanid
- ↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Handbookஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ வார்ப்புரு:Cite journal