தங்குதன்(III) அயோடைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

தங்குதன்(III) அயோடைடு (Tungsten(III) iodide) என்பது தங்குதன் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது WI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. தங்குதன் மூவயோடைடு, தங்குதன் டிரை அயோடைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

தங்குதன் அறுகார்பனைல் சேர்மத்துடன் அயோடினைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக தங்குதன்(III) அயோடைடு உருவாகிறது.[1][2]

2 W(CO)6+3 I22 WI3+12 CO

பண்புகள்

தங்குதன்(III) அயோடைடு அறை வெப்பநிலையில் அயோடினை வெளியிடும் ஒரு கருப்பு நிறமான திண்மப் பொருளாகும். மேலும் இது மாலிப்டினம்(III) அயோடைடை விட குறைவான நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. அசிட்டோன் மற்றும் நைட்ரோபென்சீனில் கரையும். குளோரோஃபார்மில் சிறிதளவு கரையும்.[1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:தங்குதன் சேர்மங்கள்

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Brauer என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. வார்ப்புரு:Cite journal
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=தங்குதன்(III)_அயோடைடு&oldid=1670" இலிருந்து மீள்விக்கப்பட்டது