தங்குதன் முச்சல்பைடு
தங்குதன் முச்சல்பைடு (Tungsten trisulfide) என்பது தங்குதன் மற்றும் கந்தகம் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது WS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. சாக்லேட்டு-பழுப்பு நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது.[1][2] The compound looks like chocolate-brown powder.[3][4]
தயாரிப்பு
1. தங்குதனேட்டுகளின் சூடான அமிலமயமாக்கப்பட்ட கரைசலில் ஐதரசன் சல்பைடு குமிழிகளை செலுத்தி இதை தயாரிக்கலாம்.[5]
2. தங்குதன் இருசல்பைடுடன் தனிமநிலை கந்தகத்தைச் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.:[6]
3.தயோதங்குதேட்டு சேர்மங்களின் கரைசல்களை அமிலமயமாக்கம் செய்தும் இதை வீழ்படிவாக்கலாம் [5]
இயற்பியல் பண்புகள்
குளிர்ந்த நீரில் சிறிது கரைகிறது. சூடான நீரில் கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது.
கார உலோக கார்பனேட்டுகள் மற்றும் கார உலோக ஐதராக்சைடுகளில் கரைகிறது.[3]
வேதிப் பண்புகள்
தங்குதன் முச்சல்பைடை சூடுபடுத்துவதால் சிதைவடைந்து தங்குதன் இருசல்பைடும் தனிமநிலை கந்தகமும் உருவாகின்றன:
சல்பைடு கரைசல்களுடன் இது வினைபுரிகிறது:
ஐதரசனுடன் சேர்க்கப்பட்டால் ஒடுக்க வினை நிகழ்கிறது.