தாமிரம்(I) ஐதராக்சைடு
தாமிரம்(I) ஐதராக்சைடு (Copper(I) hydroxide) என்பது CuOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் இருப்புக்கான சான்றுகள் மிகக் குறைவாகும். தங்கம்(I) மற்றும் வெள்ளி(I) ஆகியவற்றின் மோனோ ஐதராக்சைடுகளுக்கும் இதே போன்ற நிலைமை பொருந்தும். இருப்பினும், திண்ம CuOH ஒரு நிலையற்ற மஞ்சள்-சிவப்பு திடப்பொருளாகக் கூறப்படுகிறது.[1] தாமிரம்(I) ஐதராக்சைடு என்ற இந்த தலைப்பு கோட்பாட்டு பகுப்பாய்வின் பொருளாக உள்ளது.[2]
தாமிரம்(I) ஐதராக்சைடு சேர்மம் தாமிரம்(II) ஐதராக்சைடு சேர்மமாக எளிதில் ஆக்சிசனேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
- 4CuOH + 2 H2O + O2 → 4Cu(OH)2
தாமிரம்(I) ஐதராக்சைடு விரைவாக நீரிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது:
- 2CuOH -> Cu2O + H2O
தாமிர(I) ஆக்சைடு (Cu2O) உருவாவதில் ஓர் இடைநிலைப் பொருளாக திண்ம CuOH ஒரு முக்கியப் பொருளாக உள்ளது. இச்சேர்மம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. எ.கா. சூரிய மின்கலங்களில் பயன்படுத்துவதற்கான பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தயாரிப்பு
தாமிர(I) ஐதராக்சைடு பின்வரும் வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இந்த வினையில், எத்தனால் வினைவேகமாற்றியாக செயல்படுகிறது.
மற்றொரு முறை CuCl மற்றும் NaOH இரட்டை சிதைவுறல் வினையாகும்.
குறிப்பாக, இந்த முறை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் உருவான CuOH படிப்படியாக நீர்நீக்கமடைந்து இறுதியில் Cu2O மாறுகிறது.
வினைகள்
இரும்பு(II) ஐதராக்சைடு போன்றே தாமிர(I) ஐதராக்சைடும் எளிதாக தாமிர(II) ஐதராக்சைடாக ஆக்சிசனேற்றம் அடைகிறது.