தாமிரம்(II) போரேட்டு
Jump to navigation
Jump to search
தாமிரம்(II) போரேட்டு (Copper(II) borate) Cu3(BO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இதன் ஒளிவினையூக்கிப் பண்புகள் காரணமாக இது முன்னதாகவே ஆய்வு செய்யப்பட்டது.[1]
தயாரிப்பு
தாமிரம்(II) ஆக்சைடுடன் போரான் டிரையாக்சைடு சேர்மத்தை விகிதாச்சார முறையில் சேர்த்து கரைசலை 900 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் தாமிரம்(II) போரேட்டு உருவாகிறது.[1][2]