தாமிர ஆக்சலேட்டு
தாமிர ஆக்சலேட்டு (Copper oxalate) CuC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] தாமிரமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. நடைமுறையில் தாமிர ஆக்சலேட்டு நீர், ஆல்ககால், ஈதர் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் கரையாது. ஆனால் அம்மோனியம் ஐதராக்சைடில் கரையும். தாமிர ஆக்சலேட்டு ஒரு நீரேற்றாக உருவாகிறது. அமில-நீல படிகங்களை இது உருவாக்குகிறது.[2]
தயாரிப்பு
தாமிரம்(II) உப்புடன் சோடியம் ஆக்சலேட்டு கரைசலை சேர்த்து வீழ்படிவாக்கல் வினை மூலம் தாமிர ஆக்சலேட்டை தயாரிக்கலாம். அல்லது ஆக்சாலிக் அமிலத்துடன் தாமிர சல்பேட்டை சேர்த்து வினைபுரியச் செய்தும் தாமிர ஆக்சலேட்டை உருவாக்கலாம்.[3]
பண்புகள்
ஓர் அரைநீரேற்றாக தாமிர ஆக்சலேட்டு என்பது ஒரு நீல-வெள்ளை திண்மமாகும். இது நடைமுறையில் தண்ணீரில் கரையாதது. 200 பாகை செல்சியசு வெப்பநிலையில், படிகமயமாக்கல் காரணமாக இது தண்ணீரை இழக்கிறது. தாமிர ஆக்சலேட்டு கார உலோக ஆக்சலேட்டுகள் மற்றும் அம்மோனியம் ஆக்சலேட்டுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது:
பயன்கள்
தாமிர ஆக்சலேட்டு கரிம வினைகளுக்கு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது. அசிட்டைலேற்றம் பெற்ற அசிட்டாலை நிலைநிறுத்தவும் இது பயன்படுகிறது.[4]