தூலியம் பாசுபைடு
வார்ப்புரு:Chembox தூலியம் பாசுபைடு (Thulium phosphide) என்பது TmP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. [1][2]
தயாரிப்பு
தூலியத்தையும் பாசுபரசையும் சேர்த்து வினைப்படுத்தினால் தூலியம் பாசுபைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
அடர்த்தியான பாசுபைடு படலம் உலோகத்திற்குள் மேலும் வினைகள் நிகழ்வதைத் தடுக்கும். காலியம் ஆர்சனைடை அரித்தெடுத்த பிறகு, TmP/GaAs பல்லின கட்டமைப்பைப் பெற அதன் மேற்பரப்பில் துலியம் பாசுபைடின் ஒருங்குவளர் அடுக்கை வளர்க்கலாம். [3][4] தூலியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் படிகங்களாக உருவாகிறது. [5] இப்படிகத்தின் கட்டமைப்பு சோடியம் குளோரைடின் கட்டமைப்பை ஒத்ததாக உள்ளது.[6]
பயன்கள்
உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் சமாரியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
வார்ப்புரு:தூலியம் சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபரசு சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபைடுகள்