தெசுலா

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

தெசுலா (tesla) (குறியீடு T) என்பது அனைத்துலக முறை அலகுகளில் காந்தப்பாய அடர்த்தியின் அலகாகும்.

ஒரு தெசுலா என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் செயல்படும் ஒரு வெபர் காந்த பாயத்தின் அளவாகும். 1960 ஆம் ஆண்டு எடைகள் மற்றும் அளவுகளுக்கான பொது மாநாட்டில் இந்த அலகு அறிவிக்கப்பட்டது. நிக்கோலா தெசுலாவின் பெயரால் இந்த அலகு வழங்கப்பட்டது. [1]

அதிக அளவான காந்தப்புலத்தை ஃகால்பாக்கு உருண்டைகள் (Halbach spheres) என்னும் அமைப்பு தருகின்றன. இவற்றின் நிலை காந்தத்தின் காந்தப் புலச் செறிவு 4.5 T என இருக்கும். இலாசு ஆலமாசு தேசிய ஆய்வகத்தில் 100 தெசுலா காந்தப் புலச் செறிவுள்ள காந்தப் புலம் உண்டாக்கப்பட்டுள்ளது.[2]

வரையறை

இலாரன்சு விசை விதியின் அடிப்படையில் ஒரு கூலும் மின்மமுள்ள ஒரு துகள், ஒரு தெசுலா காந்தப் புலச் செறிவுள்ள காந்தப் புலத்திற்கு செங்குத்தாகச் ஒரு மீட்டர் / ஒரு நொடி என்ற வேகத்தில் செல்லும் போது, அது ஒரு நியூட்டன் விசையை எதிர்கொள்கிறது. ஒரு தெசுலா என்பது கீழ்க்கண்டவாறும் வழங்கப்படுகிறது.

T=Vsm2=NAm=JAm2=HAm2=Wbm2=kgCs=NsCm=kgAs2

[3]

பயன்படுத்தப்பட்டுள்ள அலகுகள் :

A = மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்
C = மின்மத்தின் அலகு கூலும்
kg = நிறையின் அலகு கிலோகிராம்
m = நீளத்தின் அலகு மீட்டர்
N = விசையின் அலகு நியூட்டன்
s = காலத்தின் அலகு நொடி
H = மின் தூண்டலின் அலகு என்றி
V = மின்னழுத்தத்தின் அலகு வோல்ட்டு
J = ஆற்றலின் அலகு சூல்
Wb = காந்தபாயத்தின் அலகு வெபர்

மின்புலமும் காந்தப்புலமும் ஏற்படுத்தும் விளைவுகள்

இலாரன்சு விசை என்பது மின்புலத்திலும் காந்தபுலத்திலும் வேறுபடுகிறது. ஒரு மின்னூட்டம் பெற்ற துகளின் நகர்வு காந்த புலத்தால் நடைபெறுகிறது.[4] ஆனால் மின் புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மின்னூட்டம் பெற்ற துகளின் நகர்வு மின் புலத்தால் நடைபெறுவதில்லை. இவற்றை அதன் அலகுகளை உற்று நோக்குவதன் மூலம் அறியலாம். மின் புலத்தில் மின்னூட்டத்தின் மீது செயல்படும் விசையால் ஏற்படும் காந்த பாய அடர்த்தி நியூட்டன் / கூலும் என்ற அலகிலும், காந்த புலத்தில் மின்னூட்டத்தின் மீது செயல்படும் விசையால் ஏற்படும் காந்த பாய அடர்த்தி தெசுலா அல்லது N/(C·m/s) என்ற அலகாலும் அளக்கப்படுகிறது. இதில் m/s மீட்டர் / நொடி என்பது திசை வேகத்தின் அலகாகும்.[5][6]

பெர்ரோ காந்தவியலின் படி காந்தப் புலம் ஏற்படுத்தும் நகர்வு என்பது எதிர்மின்னியின் தற்சுழற்சியாகும்.[7]

ஒரு மின்னோட்டம் பாயும் கம்பியில் (அதாவது மின்காந்தம்) நகர்வு என்பது எதிர்மின்னியின் நகர்வாகும்.

அலகு மாற்றங்கள்

ஒரு தெசுலா என்பது:[8]வார்ப்புரு:Pn

10,000 (அல்லது 104) G (காசு), இது செமீ.கி.நொடி என்ற அளவு முறையில் உள்ளது. அதாவது, 10 kG (கிலோ காசு) = 1 T (தெசுலா), மற்றும் 1 G (காசு) = 10−4 T (தெசுலா) .
1,000,000,000 (or 109) γ (காமா), இது புவி இயற்பியலில் பயன்படுத்தப்படுகிறது.[9] அதாவது, 1 γ (காமா) = 1 nT (நானோ தெசுலா).
42.6 MHz (மெகா கெர்ட்சு) என்பது 1H அதாவது ஐதரசன் அணுக்கரு அதிர்வெண், அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு அமைப்பில் இது பயன்படுகிறது. 1 GHz அதிர்வெண் கொண்ட அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு அமைப்பின் காந்தப் புலம் 23.5 T (தெசுலா).

எடுத்துக்காட்டுகள்

31.869 µT (3.2 × 10−5 T) – என்பது 0° அட்ச ரேகையிலும், 0° தீர்க்க ரேகையிலும் புவியின் காந்தப்புலத்தின் வலிமை.

5 mT – என்பது குளிர் சாதனப் பெட்டியில் ஒட்டப்படும் காந்தத்தின் வலிமை.

0.3 T – சூரியப்புள்ளிகளிலுள்ள காந்தப்புலத்தின் வலிமை.

1.25 T – நியோடைமியம் காந்தத்தின் மேற்பரப்பிலுள்ள காந்தப் பாய அடர்த்தி

1 T to 2.4 T – ஒலிபெருக்கியிலுள்ள கம்பிச் சுருளின் காந்தப்புல வலிமை.

1.5 T to 3 T – மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் காந்த அதிர்வு அலை வரைவியின் காந்தப்புல வலிமை.[10]

4 T – ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள மீக்கடத்துதிறன் கொண்ட கடத்தியின் காந்தப் புல வலிமை[11]

8 T – பெரிய ஆட்ரான் மோதுவியிலுள்ள காந்தத்தின் காந்தப்புல வலிமை.

11.75 T – காந்த அதிர்வு அலை வரைவியின் அதிக பட்ச காந்தப் புல வலிமை[12]

13 T – பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலையிலுள்ள காந்தத்தின் காந்தப்புல வலிமை.[13]

16 T – தவளைகளை மேலே உயர்த்தும் காந்தப்புல வலிமை.[14]

17.6 T – 2014 ஆம் ஆண்டு ஆய்வகங்களில் மீக்கடத்துதிறன் கொண்ட காந்தத்தால் உருவாக்கப்பட்ட வலிமையான காந்தப்புலம்.[15]

27 T – கடுங்குளிரியல் வெப்பநிலையில் உருவாக்கப்படும் மீக்கடத்துதிறன் கொண்ட காந்தத்தால் உருவாக்கப்பட்ட அதிக பட்ச காந்தப்புலம்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Wiktionary

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=தெசுலா&oldid=1401" இலிருந்து மீள்விக்கப்பட்டது