தோரியம் ஆக்சிபுளோரைடு
Jump to navigation
Jump to search
தோரியம் ஆக்சிபுளோரைடு (Thorium oxyfluoride) ThOF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து தோரியம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது.[1][2][3]
தயாரிப்பு
- தோரியம் டெட்ராபுளோரைடு சேர்மத்தை ஈரமான காற்றில், 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் பகுதியளவு நீராற்பகுப்பு செய்து தோரியம் ஆக்சிபுளோரைடைத் தயாரிக்கலாம்.[4][5]
- தோரியம் டெட்ராபுளோரைடு சேர்மத்துடன் தோரியம் டையாக்சைடு சேர்மத்தை 600 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தும் தோரியம் ஆக்சிபுளோரைடு தயாரிக்கலாம்:
இயற்பியல் பண்புகள்
தோரியம் ஆக்சிபுளோரைடு வெண்மையான நிறத்தில் படிக உருவமற்ற தூளாக உருவாகிறது. இது நீரில் கரையாது.[6]
பயன்கள்
பிரதிபலிக்கும் மேற்பரப்புகளில் ஒரு பாதுகாப்பு பூச்சாகப் பூசப் பயன்படுத்தப்படுகிறது[7]