நிக்கல்(II) செலீனேட்டு
நிக்கல்(II) செலீனேட்டு (Nickel(II) selenate) என்பது NiSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிக்கலின் செலீனேட்டு உப்பாக இது கருதப்படுகிறது.
தயாரிப்பு
செலீனிக்கு அமிலத்துடன் நிக்கல்(II) கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிக்கல்(II) செலீனேட்டு உருவாகும். [1]
பண்புகள்
நிக்கல்(II) செலினேட்டு அறுநீரேற்று பச்சை நிற திண்மப் பொருளாகும்.[2] P41212 (எண். 92) என்ற இடக்குழுவில் இது நாற்கோண வடிவத்தில் படிகமாகியிருக்கும்.[3] 100 ° செல்சியசு வெப்பநிலையில் நிக்கல்(II) செலீனேட்டு மெதுவாக நீர் மூலக்கூறை இழந்து P21/n (எண். 14) என்ற இடக்குழுவில் நான்கு நீரேற்றாக மாறுகிறது. 510 பாகை செல்சியசு வெப்பநிலையில், நிக்கல்(II) செலினேட்டு நேரடியாக நிக்கல் செலினைட்டாக சிதைகிறது. இது மேலும் சூடாக்கும்போது நிக்கல் ஆக்சைடு மற்றும் செலினியம் டையாக்சைடாக சிதைகிறது[4]
நிக்கல்(II) செலீனேட்டும் பொட்டாசியம் செலீனேட்டும் சேர்க்கப்பட்டு குளிர்வித்து சூடான் நீரிய கரைசலில் படிகமாக்கினால் நீப்-பச்சை நிற [Ni(H2O)6](SeO4)2. உருவாகும். [5]
மேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:நிக்கல் சேர்மங்கள்
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;GESTISஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal