நீர் ஒப்படர்த்தி

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

நீர் ஒப்படர்த்தி அல்லது நீர் ஒப்பெடை ("ஒப்பெடை") என்பது ஒரு பொருளின் அடர்த்தியானது நீரின் அடர்த்தியோடு ஒப்பிடும் பொழுது எத்தனை (எவ்வளவு) மடங்காக உள்ளது என்பதாகும். ஒரு பொருளின் ஒப்படர்த்தி ஒன்று என்றால் அப்பொருள் நீரின் அடர்த்தியே கொண்டுள்ளது என்று பொருள். ஒப்படர்த்தி எண் ஒன்றைக் காட்டிலும் பெரியதாயின், அப்பொருள் நீரை விட அடர்த்தி அதிகமானது என்று பொருள்; ஒன்றை விட குறைவாயின் நீரைவிட அடர்த்தி குறைந்தது என்று பொருள். ஒப்படர்த்தியின் வரையறை :

SG=ρsubstanceρH2O


மேலே உள்ளதில் SG = நீர் ஒப்படர்த்தி அல்லது நீர் ஒப்பெடை
ρsubstance = பொருளின் அடர்த்தி
ρH2O = நீரின் அடர்த்தி.

நீரின் அடர்த்தி ρH2O = 1000 kg·m−3 (at 4 °C/39.2 °F) SI அலகில்.

நீர் ஒப்படர்த்தி என்பது பண்பலகு அற்ற எண் ஆகும்.

அளப்பு

பயன்

ஒரு கரைசலை குலுக்கும்போது அதிலுள்ள பொருள்களில் ஒப்படர்த்தி மிகுதியானவை முதலில் கீழே படியத்துவங்குகின்றன. இவ்விளைவின் துணைகொண்டு பொருள்களைப் பிரிக்கவும் அவை கலந்துள்ள விகிதத்தை அளக்கவும் முடியும். நீர்மங்களில் கலந்துள்ள மாசுப்பொருள்களை நீக்குவதற்கு இப்பண்பைப் பயன்படுத்துகின்றனர்.[1] சிறுநீர், குருதி போன்றவற்றை ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்யவும் இவ்வளவை பயன்படுகிறது.[2]

குறிப்புகளும் மேற்கோள்களும்

நூல்கள்

  • Fundamentals of Fluid Mechanics Wiley, B.R. Munson, D.F. Young & T.H. Okishi
  • Introduction to Fluid Mechanics Fourth Edition, Wiley, SI Version, R.W. Fox & A.T. McDonald
  • Thermodynamics: An Engineering Approach Second Edition, McGraw-Hill, International Edition, Y.A. Cengel & M.A. Boles
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=நீர்_ஒப்படர்த்தி&oldid=251" இலிருந்து மீள்விக்கப்பட்டது