நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு (Neptunium(IV) nitrate) Np(NO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.[1][2][3] சாம்பல் நிறப் படிகங்களாக இது உருவாகும். நீரில் கரையும். படிக நீரேற்றுகளாகவும் உருவாகும்.[4][5]

தயாரிப்பு

புதியதாகத் தயாரிக்கப்பட்ட நெப்டியூனியம்(IV) ஐதராக்சைடுடன் நீர்த்த நைட்ரிக் அமிலத்தை கூடுதலாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு உருவாகும்.:[6][7]

𝖭𝗉(𝖮𝖧)𝟦+𝟦𝖧𝖭𝖮𝟥  𝖭𝗉(𝖭𝖮𝟥)𝟦+𝟦𝖧𝟤𝖮

இயற்பியல் பண்புகள்

நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு சாம்பல் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு தண்ணீரில் கரையும். Np(NO3)4•2H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட படிக நீரேற்றாகவும் இது உருவாகும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:நெப்டியூனியம் சேர்மங்கள்