நெப்டியூனியம் ஈரார்சனைடு
Jump to navigation
Jump to search
நெப்டியூனியம் ஈரார்சனைடு (Neptunium diarsenide) NpAs2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு
நெப்டியூனியம் ஐதரைடுடன் ஆர்சனிக்கு தனிமத்தை விகிதவியல் அளவுகளில் சேர்த்து சூடுபடுத்தினால் நெப்டியூனியம் ஈரார்சனைடு உருவாகிறது
இயற்பியல் பண்புகள்
நெப்டியூனியம் ஈரார்சனைடு P4/nmm என்ற இடக்குழுவில் a = 0.3958 நானீமீட்டர், c = 0.8098 நானீமீட்டர் என்ற செல் அளபுருக்களுடன் நாற்கோணகப் படிகத் திட்டத்தில் படிகமாகிறது.[4]