பாஸ்கலின் விதி
Jump to navigation
Jump to search
பாஸ்கலின் விதி (Pascal's law) பாய்மங்களின் அழுத்தத்தைப் பற்றிய விதியாகும். இவ்விதியின் படி முழுவதும் திரவத்தால் நிரப்பப்பட்ட மூடிய கலனில் கொடுக்கப்படும் அழுத்தமானது கலனிலுள் அனைத்து கிடை பகுதியிலும் சம அளவில் இருக்கும். அவ்வழுத்தத்தால் உருவாகும் விசை கலனில் சமபரப்பில் சம அளவில் இருப்பதோடு கலனின் உட்பரப்பிற்கு செங்குத்தாகவும் அமையும். இவ்வழுத்தம் கொள்கலனின் வடிவத்தைப் பொறுத்ததல்ல.[1] இவ்விதி பிரெஞ்சு கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது.[2]
வரைவிலக்கணம்

பாசுக்கலின் விதி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
இவ்விதி கணித முறையில் பின்வருமாறு தரப்படும்:
- வார்ப்புரு:Math என்பது நிலைநீர் அழுத்தம் (அனைத்துலக முறை அலகுகளில் இது பாசுக்கல் அலகில் தரப்படும்), அல்லது பாய்ம நிரல் ஒன்றின் இரு புள்ளிகளில் பாய்மத்தின் நிறியினால் ஏற்படும் அழுத்த வேறுபாடு ஆகும்.
- ρ பாய்ம அடர்த்தி (கிலோகிராம் / கனமீட்டர்;
- g புவியீர்ப்பினால் ஏற்படும் ஆர்முடுகல் (மீட்டர்/செக்2;
- வார்ப்புரு:Math அளக்கப்படும் புள்ளியில் இருந்து பாய்மத்தின் உயரம் (மீட்டரில்).