பின்னடைவுத் திசைவேகம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

பின்னடைவுத் திசைவேகம் (Recessional velocity) என்பது ஒரு பொருள் விலகிச் செல்லும், குறிப்பாக பூமியிலிருந்து விலகிச்செல்லும் விகிதத்தைக் குறிக்கிறது[1].

அண்டவியல் பயன்

வெகு தொலைவிலுள்ள விண்மீன் பேரடைகளுக்கு பின்னடைவு திசைவேகம் மிகவும் பொருத்தமாக உள்ளது. பூமியிலிருந்து அவற்றுக்கிடையே உள்ள தொலைவுக்கு ஏற்ப அவற்றின் சிவப்புப் பக்கப் பெயர்ச்சி விகிதச் சம அளவில் நகர்கிறது (அப்பிள் விதி). சிவப்புப் பக்கப் பெயர்ச்சி பொதுவாக பின்னடைவு திசைவேகத்தின் விளைவாக நிகழ்கிறது என்று பொருள் விளக்கம் தரப்படுகிறது. இப்பின்னடைவுத் திசைவேகம் ஒரு வாய்ப்பாட்டின் வழியாகக் கணக்கிடப்படுகிறது.

v=H0D 

இங்கு H0 என்பது அப்பிள் மாறிலியைக் குறிக்கிறது. D என்பது இடையீட்டுத் துரம் மெகாபார்செக் அல்லது மெகாபுடைநொடியையும், v என்பது பின்னடைவுத் திசைவேகத்தையும் குறிக்கிறது. இது பொதுவாக கிலோமீட்டர்/வினாடி களில் அளவிடப்படுகிறது. சிவப்புப் பக்கப் பெயர்ச்சியின் போது பொதுவாக வெளிவிடப்படும் மின்காந்த கதிர்வீச்சின் அடிப்படையிலேயே பின்னடைவுத் திசைவேகம் கணக்கிடப்படுகிறது. விண்மீன் பேரடையின் தொலைவானது பின்னர் அப்பிள் விதியைக் கொண்டும் கணக்கிடப்படுகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. Recessional velocity (en.mimi.hu) Accessed 3. 1. 2015.