பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு
பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு (Praseodymium(III) acetate ) Pr(O2C2H3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியத்தின் நேர்மின் அயனிகள் மூன்றும் மூன்று அசிட்டேட்டு குழுக்கள் எதிர்மின் அயனியாகவும் இணைந்து இந்த கனிம வேதியியல் உப்பு உருவாகிறது. பொதுவாக ஒரு இருநீரேற்றாக பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு உருவாகிறது. Pr(O2C2H3)3·2H2O என்பது இந்த இருநீரேற்றின் மூலக்கூற்று வாய்ப்பாடாகும்.[1]
தயாரிப்பு
அசிட்டிக் அமிலமும் பிரசியோடைமியம்(III) ஆக்சைடும் சேர்ந்து வினைபுரிவதால் பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு உருவாகிறது.:[2]
பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு மற்றும் பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு சேர்மங்களையும் இதற்காகப் பயன்படுத்தலாம்:
- ↑
சிதைவு
இருநீரேற்றை சூடாக்கும்போது அது நீரிலியாகச் சிதைந்து, பின்னர் பிரசியோடைமியம்(III) ஆக்சியசிட்டேட்டாக மாறி (PrO(O2C2H3)) பிறகு பிரசியோடைமியம்(III) ஆக்சிகார்பனேட்டாகவும், கடைசியில் பிரசியோடைமியம்(III) ஆக்சைடாகவும் சிதைகிறது.[1]