பிரிடினியம் குளோரைடு
வார்ப்புரு:Chembox பிரிடினியம் குளோரைடு (Pyridinium chloride) என்பது C5H5NHCl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
டை எத்தில் ஈதரில் கரைந்துள்ள பிரிடினில் ஐதரசன் குளோரைடு வாயுவைச் செலுத்தி பிரிடினியம் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.
பிரிடினியம் அயனி ஒன்றை கொண்டிருக்கும் பிரிடினியம் குளோரைடு தோராயமாக 5 காடித்தன்மை எண் மதிப்பைக் கொண்டுள்ளது. வழக்கமான அமீன்களை விட இது சற்று அதிக அமிலத்தன்மை கொண்டது என்பது இம்மதிப்பீட்டின் பொருளாகும். நைட்ரசனின் sp2 கலப்பினச் சேர்க்கையால் இது ஏற்படுகிறது: அமோனியம் நேர்மின் அயனிகளில் உள்ள நைட்ரசன்களை விட பிரிடீனியம் குளோரைடில் உள்ள நைட்ரசன்கள் அதிக மின்னெதிர்ப்பு தன்மை கொண்டுள்ளன. அமோனியாவில் இருக்கும் நைட்ரசன்கள் sp3 கலப்பில் உள்ளன. எனவே அவை அமின்களை விட வலிமையானவையாகவும், எளிதில் காரங்களால் புரோட்டான் நீக்கம் செய்யக்கூடியவையாகவும் உள்ளன.[1]