பிரேசிலிய ரெயால்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Currency ரெயால் (வார்ப்புரு:IPAc-en; பிரேசிலிய போர்த்துக்கேயம்: ரெயாவ்; பன்மை ரெயாயிசு) பிரேசிலின் புழக்கத்திலுள்ள நாணயம் ஆகும். இதன் குறியீடு R$ மற்றும் ஐ.எசு.ஓ குறியீடு BRL ஆகும். ஒரு ரெயால் 100 சென்டவோசாக ("நூற்றிலொன்று") பகுக்கப்பட்டுள்ளது.

இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. அமெரிக்க டாலருக்கு இணையான நாணயமாற்று வீதத்தில் (1:1) வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது.

டாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு (S) மூலம் குறிக்கப்படுகிறது.[1] இருப்பினும் ஒருங்குறி இதனை எழுத்துரு வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை.[2]

மேற்சான்றுகள்

வார்ப்புரு:Reflist

  1. வார்ப்புரு:Cite web
  2. வார்ப்புரு:Cite webUnicode 0024 DOLLAR SIGN= milréis, escudo, used for many peso currencies in Latin America and elsewhere, glyph may have one or two vertical bars
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பிரேசிலிய_ரெயால்&oldid=1006" இலிருந்து மீள்விக்கப்பட்டது