பிளாங்க் (விண்கலம்)
வார்ப்புரு:Infobox Space telescope பிளாங்க் (Planck) என்பது பெரு வெடிப்பின் எச்சக் கதிர்வீச்சை (relic radiation) ஆராய்ந்திட ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் (ஈசா) உருவாக்கப்பட்ட முதல் வானாய்வுத் திட்டம் ஆகும்.பிளாங்க் விண்கலம் 2009 மே 14 ஆம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்டது. அண்டத்தின் தோற்றம், பரிணாமம் குறித்த வானியலர்களின் கருத்துகளைச் சரிபார்க்க பிளாங்க் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013 தரவுகள் வெளியிடப்படல்
ஐரோப்பியர் தலைமையில் அமைந்த ஆய்வாளர் குழு பிளாங்க் திட்டத்தின் பகுதியாக, அண்டத்தில் நுண்ணலை பரவியிருக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்ட விண்வெளி அமைப்புப் படம் (all-sky map) ஒன்றினை மார்ச்சு 21, 2013இல் வெளியிட்டது.
இந்தப் படத்தை நோக்கும்போது, அண்டம், இதுவரை அறிவியலார் நினைத்ததைவிட சற்றே கூடுதல் பழைமையானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இப்படத்தின்படி, அண்டம் தோன்றி 370,000 ஆண்டுகள் ஆனபோது ஆழ்விண்வெளியில் தட்பவெப்ப நிலையின் துல்லியமான மாற்றங்கள் பதிவாயின. அண்டம் தோன்றி ஒரு வினாடியின் டிரில்லியன் பகுதியை விடவும் குறைந்த நேரத்தில் (10−30) எழுந்த அலைகளின் பதிவுகளை மேற்கூறிய மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. அந்த அலைத் துகள்களிலிருந்துதான் இன்று நாம் காணக்கூடிய விண்மீன் பேரடைகளும் (galaxy clusters) கரும்பொருளும் (dark matter) உருவாயின என்று தெரிகிறது.
பிளாங்க் திட்டத்தின் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, அண்டத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதுவரையிலும் அண்டம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு அல்லது பெருவிரிவு (Big Bang) என்னும் நிகழ்விலிருந்து தோன்றியது என்று அறிவியலார் கணக்கிட்டிருந்தனர். துல்லியமாகக் கூறப்போனால், அண்டம் 13.798 ± 0.037 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. மேலும் அண்டத்தின் 4.9% பகுதி பருப்பொருளாக உள்ளது; 26.8% பகுதி கரும்பொருளாக உள்ளது; எஞ்சிய 68.3% பகுதி கருப்பு ஆற்றலாக (dark energy) உள்ளது.[1]
மேலும், அண்டம் விரிந்துகொண்டே செல்கின்றது என்று அறிவியலார் கண்டுபிடித்து, அது எந்த வேகத்தில் விரிந்து செல்கின்றது என்பதையும் கணித்துள்ளார்கள். இந்தக் கணிப்பையும் பிளாங்க் ஆய்வாளர்கள் இப்போது மாற்றிக் கூறுகின்றார்கள். ஹபிள் விதி கூறுவதில் ஹபிள் மாறிலி உள்ளது. அந்த மாறிலி இதுவரையிலும் 69.32 ± 0.80 (km/s)/Mpc என்று கணிக்கப்பட்டது. பிளாங்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புப்படி, ஹபிள் மாறிலி 67.80 ± 0.77 (km/s)/Mpc என்றிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.[1][2][3][4][5] இந்த மிகத் துல்லியமான சிறிய மாற்றம் வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய அதிசயச் செய்தியாக இருந்தது. வார்ப்புரு:-
| Parameter | Symbol | Planck 68% limits (CMB+lensing) |
Planck 68% limits (WP+highL+BAO) |
|---|---|---|---|
| Age of the universe (Ga) | வார்ப்புரு:Val | வார்ப்புரு:Val | |
| Hubble's constant ( வார்ப்புரு:Frac ) | வார்ப்புரு:Val | வார்ப்புரு:Val | |
| Physical baryon density | வார்ப்புரு:Val | வார்ப்புரு:Val | |
| Physical cold dark matter density | வார்ப்புரு:Val | வார்ப்புரு:Val | |
| Dark energy density | வார்ப்புரு:Val | வார்ப்புரு:Val | |
| Density fluctuations at 8h−1 Mpc | வார்ப்புரு:Val | வார்ப்புரு:Val | |
| Scalar spectral index | வார்ப்புரு:Val | வார்ப்புரு:Val | |
| Reionization optical depth | வார்ப்புரு:Val | வார்ப்புரு:Val |