புரோடாக்டினியம்(IV) புரோமைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox புரோடாக்டினியம்(IV) புரோமைடு (Protactinium(IV) bromide) என்பது PaBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினைடு ஆலைடாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் புரோடாக்டினியமும் புரோமினும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உண்டாகிறது. புரோடாக்டினியம்(IV) புரோமைடு கதிரியக்கப்பண்பு கொண்டதாகும். புரோமினுடைய பழுப்பு நிறம் காரணமாக புரோடாக்டினியம்(IV) புரோமைடு நாற்கோண வடிவத்தில் பழுப்பு நிற படிகங்களாகக் காணப்படுகிறது.[1][2] வெற்றிடத்தில் 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் பதங்கமாகிறது. புரோடாக்டினியம்(IV) புரோமைடு சேர்மத்தின் கட்டமைப்பு புரோடாக்டினியம்(IV) புரோமைடு சேர்மத்தின் கட்டமைப்புக்கு அருகில் உள்ளது.

தயாரிப்பு

புரோடாக்டினியம்(V) புரோமைடுடன் ஐதரசன் வாயு அல்லது அலுமினியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் புரோடாக்டினியம்(IV) புரோமைடு உருவாகிறது.:[3]

𝟥𝖯𝖺𝖡𝗋𝟧+𝖠𝗅 400450oC 𝟥𝖯𝖺𝖡𝗋𝟦+𝖠𝗅𝖡𝗋𝟥
𝟤𝖯𝖺𝖡𝗋𝟧+𝖧𝟤 800oC 𝟤𝖯𝖺𝖡𝗋𝟦+𝟤𝖧𝖡𝗋

பண்புகள்

ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் புரோடாக்டினியம்(IV) புரோமைடு வினைபுரிந்து புரோடாக்டினியம் புரோமேட்டு கிடைக்கிறது:[4]

𝟥𝖯𝖺𝖡𝗋𝟦+𝖲𝖻𝟤𝖮𝟥 150200oC 𝟥𝖯𝖺𝖮𝖡𝗋𝟤+𝟤𝖲𝖻𝖡𝗋𝟥

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:புரோடாக்டினியம் சேர்மங்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; pabr4 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; pabr5b என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. வார்ப்புரு:Cite book
  4. வார்ப்புரு:Cite book