புரோப்பேனமைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

புரோப்பேனமைடு (Propanamide) என்பது C3H7NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். CH3CH2C=O(NH2).[1] என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. புரோப்பேனாயிக்கு அமிலத்தினுடைய அமைடு சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது.

இந்த கரிமச் சேர்மம் ஓர் ஒற்றைப்-பதிலீடு செய்யப்பட்ட அமைடு ஆகும்.[2] அமைடு குழுவின் கரிமச் சேர்மங்கள் பல்வேறு கரிம செயல்முறைகளில் வினைபுரிந்து பிற பயனுள்ள சேர்மங்களை உருவாக்குகின்றன.

தயாரிப்பு

யூரியா மற்றும் புரோப்பேனாயிக்கு அமிலம் ஆகியவற்றுக்கு இடையே நிகழும் ஒடுக்க வினையின் மூலம் புரோப்பேனமைடு சேர்மத்தைத் தயாரிக்கலாம்:

(NHA2)A2CO+2CHA3CHA2COOHCHA3CHA2CO(NHA2)+HA2O+COA2

அல்லது அமோனியம் புரோப்பியோனேட்டை நீர் நீக்க வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.

(NHA4)CHA3CHA2COOCHA3CHA2CONHA2+HA2O

வினைகள்

புரோப்பேனமைடு ஓர் அமைடாக இருப்பதால் எத்திலமீன் வாயுவை உருவாக்கப் பயன்படும் ஆஃப்மேன் மறுசீரமைப்பு வினையில் இது பங்கேற்க முடியும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=புரோப்பேனமைடு&oldid=1782" இலிருந்து மீள்விக்கப்பட்டது