புரோமித்தியம்(III) நைட்ரேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

புரோமித்தியம்(III) நைட்ரேட்டு (Promethium(III) nitrate) என்பது Pm(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. கதிரியக்கப்பண்பு கொண்ட இச்சேர்மம் நீரில் கரைகிறது.[1] படிக நீரேற்றுகளாகப் படிகமாகிறது.[2]

தயாரிப்பு

புரோமித்தியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது

Pm+6HNOA3Pm(NOA3)A3+3NOA2+3HA2O

இயற்பியல் பண்புகள்

ஊதா இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக புரோமித்தியம்(III) நைட்ரேட்டு படிகமாகிறது. Pm(NOA3)A36HA2O என்ற வாய்ப்பாடு கொண்ட படிக நீரேற்றாக புரோமித்தியம்(III) நைட்ரேட்டு படிகமாகிறது.[3][4]

வேதியியல் பண்புகள்

புரோமித்தியம்(III) நைட்ரேட்டு வெப்பத்தாற் சிதைவடைந்து புரோமித்தியம்(III) ஆக்சைடு சேர்மமாக மாறுகிறது.[5]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:நைத்திரேட்டுகள்