புரோமித்தியம்(III) புளோரைடு
Jump to navigation
Jump to search
புரோமித்தியம்(III) புளோரைடு (Promethium(III) fluoride) என்பது PmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் புளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை புரோமித்தியம் முப்புளோரைடு என்ற பெயராலும் அழைக்கலாம். இளஞ்சிவப்பு நிறத்தில் சாய்சதுர வடிவில் இச்சேர்மம் காணப்படுகிறது.[1]
நீரில் சிறிதளவு கரையும். இலித்தியம் உலோகத்துடன் புரோமித்தியம்(III) புளோரைடு வினைபுரிந்து இலித்தியம் புளோரைடையும் உலோக புரோமித்தியத்தையும் கொடுக்கிறது.:[2]